அண்ணாமலைக்கு பதிலாக பொன்னார் நியமனமா? ரெடியாகும் அடுத்த தலைவர் லிஸ்ட்

 
p

 தலைமை முடிவுக்கு கட்டுப்படாததால் அண்ணாமலைக்கு பதிலாக தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுகிறார் என்றும்,  இதனால் அடுத்த தலைவருக்கான லிஸ்ட் ரெடியாகுது என்றும், அனேகமாக பொன் ராதாகிருஷ்ணன் தலைவராக நியமிக்கப்படுவார் என்று தகவல் பரவுகிறது.

a

 அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்றத் தேர்தலின் நலன் கருதி ஒருங்கிணைந்த அதிமுகவை விரும்பியது பாஜக தலைமை . ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ், சசிகலா,  தினகரனுடன் சேர முடியாது என்று பிடிவாதம் பிடித்து வருகிறார் . ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலிலும் ஒருங்கிணைந்த அதிமுகவாக இருந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று வேண்டினார் அண்ணாமலை.  ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எதையும் எதையும் காதில் வாங்காமல் தனது அணியின் சார்பில் வேட்பாளரை அறிவித்து விட்டார்.   இதனால் வேறு வழி இன்றி பாஜகவும் வேண்டாவிருப்பாகவே தனது ஆதரவை தெரிவித்தது. 

 நினைத்தபடியே அதிமுக மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்ததால் ,  அடுத்து வரும் தேர்தல்களிலும் இதே போன்ற நிலையை சந்திக்க வேண்டிய வருமோ என்று நினைத்து அது குறித்து அண்ணாமலை கருத்து தெரிவிக்க , பதிலுக்கு அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்க , கூட்டணிக்குள் மோதல் ஏற்பட்டது. 

இந்த நிலையில் அதிமுகவில் இருந்து விலகி தமிழக பாஜகவுக்கு சென்று அங்கே தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில தலைவராக இருந்த நிர்மல் குமார் அண்ணாமலையின் அதிரடிகளால், தடாலடிகளால் கட்சியை விட்டு வெளியேறி உடனே எடப்பாடி தலைமையில் அதிமுகவில் இணைந்து விட்டார் . திட்டமிட்டு எடப்பாடி,  நிர்மல் குமாரை அழைத்துக் கொண்டு விட்டார் என்று அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் விமர்சனம் செய்து வந்தபோது,  அண்ணாமலை ஒரு 420 என்று   விமர்சித்தார் நிர்மல் குமார் . பதிலுக்கு அண்ணாமலையின் ஆதரவாளர் அமர்பிரசாத் ரெட்டி,  எடப்பாடி பழனிச்சாமியை 420 என்று விமர்சித்தது  கூட்டணிக்குள் மோதலை  பெரிது படுத்தியது .

b

எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை, உருவ பொம்மையை அண்ணாமலை ஆதரவாளர்கள் எரிக்க,  பதிலுக்கு அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையின் உருவ பொம்மை,  உருவப் படத்தை எரித்தனர் .  நிலைமை மோசமாவதை உணர்ந்த அதிமுக -பாஜக இரு தரப்பிலும் உள்ள சீனியர்கள் சமாதான நடவடிக்கையில் இறங்கினர்.

 கிருஷ்ணகிரி வந்த பாஜக தேசிய தலைவர் நட்டாவும் அண்ணாமலை இடம் சமூகமாக போக சொல்லி இருக்கிறார்.  அதிமுகவுடன் தான் கூட்டணி தொடர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் .   எடப்பாடி பழனிச்சாமியும் இந்த விவகாரம் குறித்து அமித்ஷாவிடம் தொலைபேசியில் பேசிய போது,  கூட்டணி தொடரும் என்று உறுதியாக கூறி இருக்கிறார்.  நிர்மல் குமாரை நாங்களாக அழைக்கவில்லை . எங்கள் கட்சியிலிருந்து சென்றவர் அவராகவே வந்து சேர்ந்திருக்கிறார். எங்களுக்கு தேவைப்பட்டதால் சேர்த்துக் கொண்டோம் என்று விளக்கம் அளித்து இருக்கிறார்.

 இத்தனை பிரச்சனைக்கும் காரணம் அண்ணாமலை தான் அவர்தான் தேவை இல்லாமல் பிரச்சனையை செய்து கொண்டிருக்கிறார் என்று  அதிமுக எம்பி தம்பிதுரை மோடியிடம் நேரடியாகவே புகார் கூறியிருக்கிறார்.  அதிமுக கூட்டணியில் இருக்கும் ஜி.கே. வாசனும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்தில் அண்ணாமலை சொல்வது மாதிரி அதிமுகவை தவிர்த்து விட்டு கூட்டணி அமைத்தால் அது சரியாக இருக்காது என்று வலியுறுத்தி இருக்கிறார்.  இதனால் பாஜக தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக ,முடிவாக, உறுதியாக இருக்கிறது.  ஆனால் அண்ணாமலை பிடிவாதமாக நிற்கிறார்.

  இதன் பின்னர் கூட்டணி மோதல் சரியாகிவிட்டது என்ற நிலை இருந்தது.  ஆனால் அண்ணாமலை கூட்டணி மோதல் சரியாகவில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

bj

 சென்னை அமைந்த கரையில் அய்யாவு திருமண மண்டபத்தில் நடந்த பாஜக மாநில நிர்வாகி கூட்டத்தில் பேசிய போது, பாஜகவை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் ஐபிஎஸ் பொறுப்பை விட்டு விட்டு தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்தேன்.  சமரசங்களை செய்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.  கூட்டணியில் சமரசங்களை செய்ய சொல்கின்றார்கள்.  சமரசம் செய்து கூட்டணியை ஏற்படுத்தி அதன் வழியில் செல்ல வேண்டும் என்றால் அதற்கு அண்ணாமலை தேவையில்லை.  அப்படி ஒரு சமரசமும் தேவையில்லை . அண்ணாமலைக்கு தலைவர் பொறுப்பு அவசியம் இல்லை.  கூட்டணிக்காக சமரசங்கள் செய்து கட்சியை கட்டமைத்து செல்ல இங்கே நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கட்சியை வழிநடத்தலாம்.  அப்படி கூட்டணி அமைந்தால் நான் தொண்டனாக இருப்பேன்.  அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பது என்றால் நான் நிச்சயம் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

 இதன் மூலம் அதிமுகவுடன் சமூகமாக செல்ல வேண்டும் கட்சியுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தலைமை அழுத்தம் கொடுத்து இருப்பதாகவே அண்ணாமலையின் பேச்சு சொல்கிறது.  ஆனால் அண்ணாமலை தலைமைக்கு கட்டுப்படாதவராகவே இருக்கிறார்.  இதனால் அண்ணாமலை சொன்னதுபடியே அவரே தலைவர் பதவியில் இருந்து அவர் விலகி விட்டால் , இல்லை விலக வைத்துவிட்டாலும் கூட, அடுத்து யாரை தலைவர் பொறுப்புக்கு நியமிக்கலாம் என்று பாஜக தலைமை ஆலோசனை நடத்தி வருகிறதாம்.   தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் லிஸ்டில் முன்னாள் தமிழக பாஜகவின் தலைவரும்,  முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் பெயர் முதலிடத்தில் இருக்கிறதாம்.