விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுகிறதா?- ராமதாஸ் விளக்கம்

 
என்.எல்.சிக்காக மீண்டும் மீண்டும் விளைநிலங்களைப் பறிப்பதா?.. மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும்! - ராமதாஸ் கண்டனம்..

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. 

 ராமதாஸ்

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுகிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்றார்.


திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “சமூகநீதி பற்றி சில கட்சிகள் பேசினாலும் தொடர்ந்து சமூக நீதி குறித்து விடாமல் பேசி வருவது பாமக தான் என்றும் சமூக நீதி விவகாரத்தில் செய்த தவறுகளை திமுக திருத்தி அமைக்க வேண்டும். நான்காவது கட்டமாக தேர்தல் ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநானயக கூட்டணி வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்பதை பாமக வலியுறுத்தி வருகிற நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. 

ராமதாஸ்

ஜாதிவாரி கணக்கெடுப்பு பீகார் ஆந்திரா, கந்நாடகாவில் நடத்தப்பட்டு தெலுங்கானாவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் இடஒதுக்கீடு வழங்கி இருக்கலாம் ஆனால்  இரண்டு ஆண்டுகளாகியும் இடஒதுக்கீடு தமிழக அரசு வழங்கவில்லை. அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி மனு அளித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காததால் இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் நடத்தப்படும். அதற்கான தேதி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார்.