“உண்மையான தலைவர் நான்தான்” - போராடும் ராமதாஸ்
பாமகவின் உண்மையான தலைவர் நான் தான், அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே உட்கட்சி பூசல் நிலவுகிறது. அதனால் இரு தரப்பினரும் தனித்தனி அணிகளாக இயங்குகின்றனர்.
அன்புமணி ராமதாஸ் தனது தரப்பில் பொதுக்குழுவை நடத்தி மேலும் ஒரு வருடத்திற்கு தலைவராக நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றினர். பதிலுக்கு ராமதாஸ் நடந்த சிறப்பு பொதுக்குழுவை கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸை தேர்ந்தெடுத்தனர். இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி அன்புமணியை பாமகவில் இருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார். இதனிடையே அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தை அங்கீகரித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், சின்னத்தையும் அன்புமணி தரப்புக்கு வழங்கியுள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ள புகாரில், “தனது பதவிக்காலம் ஓராண்டு நீடிப்பதாக அவர் சட்டவிரோதமான தவறான தகவலை அன்புமணி அனுப்பியுள்ளார். இது தேர்தல் ஆணையத்தை தவறாக வழிநடத்தும் செயல். எங்கள் தரப்பு தலைமையிலான புதிய நிர்வாகக் குழுவை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும், பாமகவின் உண்மையான தலைவர் நான் தான், அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. தலைவர் பதவியில் இல்லாதவருக்கு கட்சி அங்கீகாரமும் சின்னமும் ஒதுக்கியிருப்பது ஏற்புடையதல்ல. உரிய விசாரணைக்கு பிறகே கட்சியின் அங்கீகாரத்தை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


