திமுக கூட்டணியில் பாமக? – தொல்.திருமாவளவன் பதில்!

 

திமுக கூட்டணியில் பாமக? – தொல்.திருமாவளவன் பதில்!

திமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கும் என்பது யூகம் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. அதற்காக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் அதிரடியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதே வேளையில் பிற கட்சிகள் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இதில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் கட்சியுடன் தான் கூட்டணி அமைப்போம் என பாமக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனை ஜி.கே மணியும் உறுதி செய்திருந்தார்.

திமுக கூட்டணியில் பாமக? – தொல்.திருமாவளவன் பதில்!

இந்த நிலையில் திமுக கூட்டணியில் பாமக இணையும் என்பது யூகம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பாமக திமுகவுடன் கூட்டணி அமைக்காது என்றும் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளித்தால் மற்ற சமூகத்தின் வாக்கு வங்கியை இழக்க நேரிடும் என்பதால் திமுக பாமகவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.