நீக்கும் ராமதாஸ்... சேர்க்கும் அன்புமணி! பாமகவில் நீடிக்கும் பதவி பஞ்சாயத்து
வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவராக பாலு தொடர்வார் என்று வழக்கறிஞர் சமூக நீதி பேரவையின் முழு ஆதரவுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு செயற்குழுவில் அறிவித்தார்.

சென்னையில் பாமக சிறப்புச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் புரவலராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமக வழக்கறிஞர் சமூக நீதி பேரவையின் அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பில் பாலு தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. சமூக நீதி பேரவையின் விதிகள் படி, தலைவரை அறங்காவலர் குழுதான் நீக்க முடியும். சமூக நீதி பேரவையின் அறங்காவலர் குழு பதவிக்காலம் முடியும் வரை பாலு தலைவர் பொறுப்பில் இருப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வழக்கறிஞர் பாலுவை பொறுப்பில் இருந்து நீக்கிய நிலையில், அன்புமணி தலைமையிலான சிறப்பு செயற்குழுவில் சமூகநீதிப் பேரவையின் தலைவராக பாலு தொடர்வார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாலுவை நீக்க ராமதாஸ்க்கு அதிகாரமில்லை என்றும் பாமக செயற்குழு திட்டவட்டமாக அறிவித்தது. முன்னர் வழக்கறிஞர் சமூக நீதி பேரவையின் தலைவராக இருந்த பாலுவை நீக்கிவிட்டு அந்த பொறுப்புக்கு கோபு என்பவரை ராமதாஸ் நியமித்திருந்தார்.


