ராமதாஸ் - அன்புமணி சமரச பேச்சுவார்த்தை

 
ச்

தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர்.

Image

புதுச்சேரி அருகேயுள்ள பட்டானூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பாமகவின்  இளைஞரணி தலைவராக தனது மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் என்பவரை நியமிப்பதாக தெரிவித்தார். அப்போது அன்புமணி ராமதாஸ் கட்சியில் நான்கு மாதத்திற்கு முன்பாக வந்தவருக்கெல்லாம் பதவி வழங்க கூடாது நீண்ட நாட்களாக உள்ளவர்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், கட்சியை உருவாக்கியவன் நான், கட்சியை உருவாக்கியவன் நான், கட்சியை உருவாக்கியவன் நான், வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான். முடிவை நான் தான் எடுப்பேன். நான் எடுத்த முடிவுதான் கட்சியின் முடிவு. விருப்பம் இல்லாதவர்கள் யாராகினும் கட்சியிலிருந்து வெளியேறலாம் அன்புமணிக்கு மேடையிலேயே அறிவுறுத்தினார். .

Image

இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுவருகின்றார். நேற்று நடந்த பாமக கூட்டத்தில் மேடையிலேயே இருவரும் கருத்து மோதலில் ஈடுபட்ட நிலையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோரும் சமரச பேச்சுவார்த்தையில் உடன் உள்ளனர். இதனிடயே முகுந்தனுக்கு பதிலாக வேறு ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என்பதில் அன்புமணி உறுதியாக இருப்பதாக தகவல் பாமகவில் தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என ராமதாஸிடம் முகுந்தன் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.