யோகி அரசு குற்றவாளிகள், மாபியாக்களுடன் சிறை-சிறை விளையாட்டு விளையாடுகிறது.. பிரதமர் நரேந்திர மோடி

 
பிரதமர் மோடி

உத்தர பிரதேசத்தில் முந்தைய அரசாங்கங்கள் குற்றவாளிகள் மற்றும் மாபியாக்களை அவர்களது சொந்த விளையாட்டை அனுமதித்தன, ஆனால் அத்தகைய குற்றவாளிகளுடன்  யோகி அரசு  சிறை-சிறை விளையாட்டு விளையாடுகிறது என்று மோடி தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் ஒரிரு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி சமீபகாலமாக உத்தர பிரதேசத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அம்மாநிலத்தில் உள்ள மீரட்டில் நேற்று மேஜர் தயான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அந்த விழாவில், உ.பி.யின் முந்தைய அரசாங்களை பிரதமர் மோடி கடுமையாக  சாடினார். 

உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு தடை; அதிர்ச்சி கிளப்பும் யோகி

பிரதமர் மோடி அந்த கூட்டத்தில் பேசியதாவது: முந்தைய அரசாங்கங்களின்போது, குற்றவாளிகள், மாபியாக்கள் தங்கள் சொந்த விளையாட்டை விளையாட அனுமதிக்கப்பட்டனர். முன்பு சட்டவிரோத ஆக்கிரமிப்பு போட்டிகள் இருந்தன. மீரட் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகள் எரிக்கப்பட்டதை மறக்க முடியாது. முந்தைய அரசாங்கங்களின்  விளையாட்டினால்தான் மக்கள் தங்கள் சொந்த வீடுகளை விட்டு வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். 

கைது

இப்போது யோகி அரசு இது போன்ற குற்றவாளிகளுடன் சிறை-சிறை (குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்) விளையாடுகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு, இங்குள்ள மகள்கள் மாலை நேரத்தில் வெளியே செல்ல பயந்தனர். இன்று, அவர்கள் முழு நாட்டையும் பெருமைப்படுத்துகிறார்கள். ரூ.700 கோடி மதிப்பிலான இந்த பல்கலைக்கழகம் இளைஞர்களுக்கு சர்வதேச விளையாட்டு வசதிகளை வழங்கும். ஒவ்வொரு ஆண்டும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் இங்கிருந்து பட்டம் பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.