தங்கள் கஜானாவை நிரப்ப சிவப்பு தொப்பிகளுக்கு அதிகாரம் தேவை.. சமாஜ்வாடியை சாடிய மோடி

 
அகிலேஷ் யாதவ்

தங்கள் கஜானாவை நிரப்பவும்,  சட்ட விரோத ஆக்கிரமிப்புகளுக்காகவும், மாபியாகளுக்கு சுதந்திரம் வழங்குவதற்காகவும் சிவப்பு தொப்பிகளுக்கு அதிகாரம் தேவை என்று சமாஜ்வாடி கட்சியை பிரதமர் மோடி மறைமுகமாக தாக்கினார். 

உத்தர பிரதேசம் கோரக்பூர் மாவட்டத்தில் ரூ.9,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் சமாஜ்வாடி கட்சியின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக சாடினார். மோடி கூறியதாவது: இன்று உத்தர பிரதேசம் முழுவதும் சிவப்பு தொப்பிகள் சிவப்பு எச்சரிக்கைகளை மட்டுமே கவனித்துக் கொண்டு இருந்தன என்பது தெரியும். உங்கள் வலிக்கும், பிரச்சினைகளுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

பிரதமர் மோடி

மோசடிகளுக்காகவும், தங்கள் கஜானாவை நிரப்பவும்,  சட்ட விரோத ஆக்கிரமிப்புகளுக்காகவும், மாபியாகளுக்கு சுதந்திரம் வழங்குவதற்காகவும் சிவப்பு தொப்பிகளுக்கு அதிகாரம் தேவை. சிவப்பு தொப்பிகள் பயங்கரவாதிகளிடம் கருணை காட்டவும், அவர்களை சிறையில் இருந்து வெளியே கொண்டு வரவும் அரசாங்கத்தை அமைக்க விரும்புகின்றன. எனவே சிவப்பு தொப்பிகள் உத்தர பிரதேசத்துக்கு சிவப்பு எச்சரிக்கை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அவை ஆபத்தான மணிகள். கோரக்பூர் உர ஆலையின் முக்கியத்துவம் இங்குள்ள விவசாயிகளுக்கும், வேலைவாய்ப்புக்கும் தெரியும். ஆனால் அதிகாரம் செலுத்திய அரசாங்கங்கள் அதை தொடங்குவதில் அக்கறை காட்டவில்லை. 

ரவுடி விகாஸ் துபே மனைவி எங்க கட்சி உறுப்பினரே கிடையாது.. அலறும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி..

கோரக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் 2017ம் ஆண்டுக்கு முன் இருந்த அரசுகள் அதற்கு நிலம் ஒதுக்குவதில் சாக்குப்போக்குகளை கூறி ஒதுக்காமல் இருந்தன. ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினரை பற்றி கவலைப்படும் ஒரு அரசாங்கம் இருக்கும்போது, அது கடினமாக உழைத்து பலனை தருகிறது. இன்று கோரக்பூரில் நடந்த நிகழ்ச்சி, புதிய இந்தியா உறுதியானால் அது முடியாதது எதுவுமில்லை என்பதற்கு சான்றாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.