காங்கிரசின் சுயநலத்தால் பல தசாப்தங்களாக பழங்குடியினரின் கலாச்சாரம், திறன் ஆகியவை புறக்கணிப்பு.. மோடி

 
மோடி

சுதந்திரத்திற்கு பிறகு தேசத்தை ஆண்டவர்களின் சுயநல அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் பல தசாப்தங்களாக பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் திறன் ஆகியவை புறக்கணிக்கப்பட்டன என்று காங்கிரசை மறைமுகமாக பிரதமர் மோடி தாக்கினார்.

மத்திய பிரதேசம் போபாலில் ஜம்போரி மைதானத்தில் பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த தினத்தையொட்டி நடைபெற்ற ஜன்ஜாதியா கவுரவ் தினம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும் ரேஷன் ஆப்கே கிராமம் என்ற திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது: அடல் பிஹாரி வாஜ்பாயின் உறுதியான மன உறுதியால் ஜார்க்கண்ட் உருவானது. பழங்குடியினர் விவகாரங்களுக்கான தனி அமைச்சகத்தை உருவாக்கி, பழங்குடியினரின் நலன்களை தேசத்தின் கொள்கைகளுடன் இணைத்தவர். ஜார்க்கண்ட் உருவான தினமான இன்று அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்துகிறேன். 

பழங்குடி மக்கள்

சில அரசியல் கட்சிகள் பழங்குடியின சமூகத்தை அனைத்து வசதிகளும் இல்லாமல் வைத்திருப்பதை நான் பார்த்து கொண்டிருந்தேன். எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடுபட வைப்பதாக வாக்குகள் கேட்கப்பட்டன. அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் செய்ய வேண்டியவை செய்யப்படவில்லை. அவர்களின் (பழங்குடி) சமூகம் ஆதரவற்ற நிலையில் இருந்தது. தேசத்தை கட்டியெழுப்புவதில் பழங்குடி சமூகத்தின் பங்களிப்பை பற்றி நாம் விவாதிக்கும்போது சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். இந்தியாவின் கலாச்சாத்தை வலுப்படுத்துவதில் தங்களுக்கு பெரிய பங்கு உண்டு என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. 

காங்கிரஸ்

ஏனென்றால் தேசம் அதை பற்றி ஒருபோதும் சொல்லவில்லை, இருட்டில் வைக்கப்பட்டது அல்லது மிகவும் குறைவாகவே அது குறித்த தகவல் கொடுக்கப்பட்டது. சுதந்திரத்திறகு பிறகு பல தசாப்தங்களாக தேசத்தை ஆண்டவர்கள் தங்களது சுயநல அரசியலுக்கு முன்னுரிமை கொடுத்ததால் இது நடந்தது. பல தசாப்தங்களாக பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் திறன் ஆகியவை புறக்கணிக்கப்பட்டன. இந்திய மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதத்தை கொண்டுள்ள போதிலும், அவர்களின் பிரச்சினைகள், கல்வி, கலாச்சாரம் அவர்களுக்கு எதுவும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.