சுயநலம், குடும்ப சுயநலம் இதுதான் அவர்களின் வளர்ச்சி மாதிரி.. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கிண்டலடித்த மோடி

 
காங்கிரஸ்

இமாச்சல பிரதேசத்தில் சுயநலம் மற்றும் குடும்ப சுயநலம் இதுதான் அவர்களின் வளர்ச்ச மாதிரி என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி மறைமுகமாக கிண்டலடித்தார்.

இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள மண்டியில் பிரதமர் நரேந்திர மோடி , தௌலா சித் நீர்மின்சாரம் மற்றும் ரேணுகாஜி அணை திட்டங்கள் உள்பட ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூரும் பங்கேற்றார். அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஒரு பிடி பிடித்தார். 

ஜெய்ராம் தாக்கூர்

பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இமாச்சல பிரதேசத்தில் இரண்டு வளர்ச்சி மாதிரிகள் உள்ளன.  அனைவரின் ஆதரவு, அனைவருக்கும் முன்னேற்றம் அனைவரின் நம்பிக்கை என்ற ஒன்று. மற்றொன்று, சுயநலம், குடும்ப சுயநலம்.  இமாச்சல பிரதேச அரசு முதல் மாதிரியாக செயல்பட்டு, மாநிலத்தில் பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கோவிட்-19க் எதிராக அரசாங்கம் போராடியது. மேலும் மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் நிறுத்தப்படாமல் இருப்பதையும் உறுதி செய்தது. 

பிரதமர் மோடி

சுற்றுச்சூழலை காப்பாற்றும் அதேவேளையில் நமது நாடு  எவ்வாறு வளர்ச்சியை விரைவுப்படுத்துகிறது என்பதற்காக முழு உலகமும் இந்தியாவை பாராட்டுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் ஒவ்வொரு வளத்தையும் முழுமையாக பயன்படுத்த நமது நாடு தொடர்ந்து உழைத்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.