‘திமுக, காங்கிரஸுக்கு குடும்பத்தை பற்றி மட்டும் தான் கவலை’ … விளாசிய பிரதமர் மோடி!

‘திமுக, காங்கிரஸுக்கு குடும்பத்தை பற்றி மட்டும் தான் கவலை’ … விளாசிய பிரதமர் மோடி!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜக, தனக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளிலும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருக்கும் அதே வேளையில், மத்திய பாஜக தலைவர்களும் தமிழகம் வந்து பிரச்சாரம் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.

‘திமுக, காங்கிரஸுக்கு குடும்பத்தை பற்றி மட்டும் தான் கவலை’ … விளாசிய பிரதமர் மோடி!

அந்த வகையில், இன்று காலை மதுரை வந்த பிரதமர் மோடி அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுக தலைவர்கள் ஓபிஎஸ் – ஈபிஎஸ் மற்றும் பாமக நிர்வாகிகள் உடனிருந்தனர். மதுரையில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற மோடி அங்கு போட்டியிடும் அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளர்களை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

‘திமுக, காங்கிரஸுக்கு குடும்பத்தை பற்றி மட்டும் தான் கவலை’ … விளாசிய பிரதமர் மோடி!

அப்போது பேசிய அவர், திருவள்ளுவரின் சிலையும் விவேகானந்தரின் மண்டபமும் இந்தியர்களை கவர்ந்துள்ளது. மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசாக நல்லாட்சியின் வலுவான சாதனைகளை கொண்டு வந்துள்ளோம். 50 ஆண்டுகளாக யாரும் கவலைப் படாத நிலையில் பாம்பனில் புதிய பாலம் கட்ட பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் சாலை பணிகளை மேற்கொள்ள ஒரு லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.டெல்லியில் மத்திய பகுதியில் ஒரு வம்சத்தின் நினைவு சின்னத்தை அமைக்க நிலம் கொடுத்துள்ளோம் என பாஜக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.

‘திமுக, காங்கிரஸுக்கு குடும்பத்தை பற்றி மட்டும் தான் கவலை’ … விளாசிய பிரதமர் மோடி!

இதைத் தொடர்ந்து, மக்கள் நிலையைப் புரிந்து கொள்ளாத உயர்மட்ட அதிகார மமதையில் இருப்பது தான் காங்கிரஸ் வழக்கம். 356 ஆவது சட்டப்பிரிவை பயன்படுத்தி அதிமுக – திமுக அரசுகளை காங்கிரஸ் கலைத்து விட்டது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வாரிசு வளர்ச்சி மீது தான் கவனம். திமுக வாரிசு அரசியலால் அக்கட்சியின் தலைவர்கள் சங்கடத்தில் உள்ளனர். நமது கவனம் நாட்டின் வளர்ச்சி மீதுதான் இருக்கிறது என பிரதமர் மோடி எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.