பிரபாகரன் விவகாரத்தில் தேவையற்ற குழப்பத்தினை ஏற்படுத்த வேண்டாம் - சீமான்

 
sn

பிரபாகரன் உயிருடன் உள்ளார்.  அவரும் அவரது மனைவியும் நலமுடன் உள்ளனர்.   விரைவில் அவர்கள் பொது இடங்களுக்கு வருவார்கள்.  இலங்கையில் ராஜபக்சேக்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம் என்று உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார். 

 பழ. நெடுமாறனின் இந்த அறிவிப்பை அடுத்து டுவிட்டர் தளத்தில் பிரபாகரன் என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.  பிரபாகரன்  உயிருடன் இருந்தால் மகிழ்ச்சி என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்.   பிரபாகரனை காட்டினால் சந்திக்க தயார் என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி.

kc

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்;  நலமுடன்  பழ.நெடுமாறன் சொன்னதை ,  இலங்கை ராணுவமும், இலங்கை வெளியுறவு அமைச்சகமும் மறுத்திருக்கிறது.

பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதற்கான டிஎன்ஏ அறிக்கை தொடங்கி எல்லா ஆதாரமும் எங்களிடம் இருக்கிறது . நிலைமை இப்படி இருக்கும்போது நெடுமாறன் எதன் அடிப்படையில் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை .  ஏற்கனவே நாங்கள் போரின் போது பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நிரூபித்து விட்டோம் என்கிறார் இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி.

p

 இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி,  பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பதை மறுத்திருக்கிறார்.    கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி நடந்த இறுதி கட்டப் போரில் பிரபாகரன் உயிரிழந்து விட்டார்.   கண்டிப்பாக அவர் உயிருடன் இல்லை என்று இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் நெடுமாறனின் கருத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.   அவர் மேலும் இது குறித்து அளித்துள்ள பேட்டியில் டிஎன்ஏ அறிக்கை தொடங்கி எல்லா ஆதாரமும் எங்களிடம் இருக்கிறது. அப்படி இருக்கையில் குறிப்பிட்ட அந்த நபரின் எந்த அடிப்படையில் சொன்னார் என்று தெரியவில்லை என்கிறார்.    

இந்நிலையில்,  பிரபாகரன் குறித்து நாள்தோறும் பேசிக்கொண்டே இருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இதுகுறித்து கருத்து கேட்க,  பிரபாகரன் விவகாரத்தில் தேவையற்ற குழப்பத்தினை ஏற்படுத்த வேண்டாம்  என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அவர் மேலு’’என் தம்பி சின்னவன் பாலசுந்திரனை சாக கொடுத்துவிட்டு எங்கள் அண்ணன் பிரபாகரன் பத்திரமாக தப்பிச் சென்று இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா/ எந்த சூழ்நிலையிலும் நான் இந்த நாட்டை விட்டு போக மாட்டேன் என்று வீரமாக நின்று சண்டையிட்டவர் எங்கள் அண்ணன் பிரபாகரன் . அவர் தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு தப்பிப்போகும் கோழை அல்ல.   போர் முடிந்து பேரழிவை நாங்கள் சந்தித்து 15 ஆண்டுகள் பத்திரமாக பிரபாகரன் ஓரிடத்தில் ஒதுங்கி இருக்கிறார் என்று நினைக்கிறீர்களா?’’ என்று சீமான் கேட்பதன் மூலம், பிரபாகரன் உயிருடன் இல்லை என்றே அவர் சொல்வதாக தெரிகிறது.