அரசியல் தெரியாதவர்கள் - இபிஎஸ், ஜெயக்குமாரை விளாசும் வைத்திலிங்கம்

 
v

முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசினார் ஓபிஎஸ்.  உடனே,  பூனை வெளியே வந்துவிட்டது என்று விமர்சித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். எடப்பாடி பழனிச்சாமியும் இதை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதன்பின்னர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்து பேசியதையும்,  ஓபிஎஸ்சுடன் சேர்ந்துகொண்டு வைத்திலிங்கம் தன்னை எதிர்ப்பதையும் கடுமையாக விமர்சித்திருந்தார் எடப்பாடி.  அதுவும் வைத்திலிங்கம் ஏரியாவுக்கே சென்று அவரை கடுமையாக விமர்சித்திருந்தார்.

e

 தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாட்டில்  நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேசியபோது தனது பேச்சில்,  அதிமுகவில் இருக்கும் ஒரு தொண்டன் கூட மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறான்.  ஆனால் இங்கே இருக்கும் வைத்திலிங்கம் எம்எல்ஏ ஆகி,  அமைச்சராகி,  எம் பி யாகி வந்தீர்களே... உங்களை நம்பி தானே இங்கு உள்ளவர்கள் இருக்கிறார்கள்.  20 ஆண்டுகள் காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தீர்களே... இந்த மாவட்ட மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறராரா? இதில் இருந்தே வைத்திலிங்கம் எப்படிப்பட்டவர் என்று நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என்கிறார். 

 அமைச்சர்கள்,  கட்சியினரெல்லாம் தங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு ஏதாவது செய்து கொடுங்கள் என்று கேட்பது வழக்கம்.  ஆனால் வைத்திலிங்கம் எதுவும் கேட்க மாட்டார்.  யாருக்கும் எதுவும் செய்ய மாட்டார்.  இப்படிப்பட்டவரை நான் வாழ்க்கையில் பார்த்ததே கிடையாது.  திருச்சியில் பொதுக்கூட்டத்தைக் கூட்டி பன்னீர்செல்வமும் வைத்திலிங்கமும் என்னை திட்டியதுதான் மிச்சம்.   பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை தொடங்கினார். மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார். அதிமுக ஆட்சியை கலைப்பதற்காக  வாக்களித்தார்.   அதனால் அவரை எந்த தொண்டனும் மன்னிக்க மாட்டார்கள்.  நாங்கள் அவருக்கு ஒருங்கிணைப்பாளர் என்றும் துணை முதல்வர் என்றும் பதவியை கொடுத்தோம்.   இதைவிட அவருக்கு என்ன வேண்டும்.

e

 பன்னீர்செல்வம் வைத்திலிங்கத்தின் வஞ்சகமும் நாடகமும் பலிக்காது.  யாரோடு சேரக்கூடாது என்று எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நினைத்தார்களோ, ஜெயலலிதா உயிர்போக காரணமாக இருந்தார்களோ அவர்களோடு  சேர்த்துக் கொண்டு திமுகவுக்கு  பி டீமாக  செயல்பட்டு வருகிறார்கள் .  டிடிவி தினகரனை பத்தாண்டு காலம் அதிமுகவில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா.  அவர் அதிமுக கட்சியினரிடம் ஆசை வார்த்தைகளை சொல்லி அமமுகவில் சேர்த்துக்கொண்டார்.  இன்றைக்கு நிலைமை என்ன? இப்போது இரண்டு துரோகிகளும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

ஜ்

இதற்கு வைத்திலிங்கம் பதிலடி கொடுத்திருக்கிறார்.   விளையாட்டுப் போட்டியை பார்க்கச் சென்றபோது ஓபிஎஸ்  சபரீசனை சந்தித்து பேசியது இயற்கையானது. அரசியல் தெரியாதவர்கள் இதை விமர்சிக்கின்றார்கள்.  அதிமுகவை ஒற்றுமைப்படுத்த சசிகலாவை ஓபிஎஸ் நிச்சயம் சந்திப்பார் என்று கூறியிருக்கிறார். சிவகங்கை மாவட்டம் காளையாகோவிலில் நடந்த கட்சி நிர்வாகி இல்ல திருமணம் விழாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது வைத்திலிங்கம் எடப்பாடிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.