மாதந்தோறும் ரூ.100 கோடி வசூல் செய்து கொடுக்கும்படி கூறிய அமைச்சர்… போலீஸ் கமிஷனர் கடிதத்தால் பரபரப்பு

 

மாதந்தோறும் ரூ.100 கோடி வசூல் செய்து கொடுக்கும்படி கூறிய அமைச்சர்… போலீஸ் கமிஷனர் கடிதத்தால் பரபரப்பு

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் துறை அதிகாரி சச்சின் வாசேவிடம் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூல் செய்து தன்னிடம் கொடுக்கும்படி மாநில உள்துறை அமைச்சர் கூறினார் என்று முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில் மும்பையின் முன்னாள் போலீஸ் கமிஷனர் கடிதம் தெரிவித்து இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மும்பையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு அருகே சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று நின்றது. அந்த காரை போலீசார் சோதனை செய்ததில் அதில் வெடிகுண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காரின் உரிமையாளர் என்பதை விசாரிக்க தொடங்கினர். இறுதியில் காரின் உரிமையாளர் ஹிரன் மன்சுக் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்ட போது, கடந்த 5ம் தேதியன்று ஹிரன் மன்சுக் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

மாதந்தோறும் ரூ.100 கோடி வசூல் செய்து கொடுக்கும்படி கூறிய அமைச்சர்… போலீஸ் கமிஷனர் கடிதத்தால் பரபரப்பு
சச்சின் வாசே

இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் சிக்கிய வழக்கை தேசிய புலானய்வு பிரிவு விசாரிக்க தொடங்கியது. கடந்த 13ம் தேதியன்று மும்பை குற்ற புலானய்வு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சச்சின் வாசே என்ற அதிகாரியை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். சச்சின் வாசே கைது செய்யப்பட்ட அடுத்த சில நாட்களில் மும்பையின் போலீஸ் கமிஷனரைாக பணியாற்றி வந்த பரம் பீர் சிங்கை மகாராஷ்டிரா அரசு இடம் மாற்றம் செய்தது.

மாதந்தோறும் ரூ.100 கோடி வசூல் செய்து கொடுக்கும்படி கூறிய அமைச்சர்… போலீஸ் கமிஷனர் கடிதத்தால் பரபரப்பு
அனில் தேஷ்முக்

இந்நிலையில் மும்பையின் முன்னாள் காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் நேற்று முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில், மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி சச்சின் வாசேவிடம் ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடி வசூல் செய்து தன்னிடம் (தேஷ்முக்) கொடுக்கும்படி கூறினார் என்று அதில் குறிப்பி்ட்டு இருந்தார். தற்போது இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.