அதிமுக- பாஜக கூட்டணி உறுதி இல்லை: பண்ருட்டி ராமச்சந்திரன்

 
அதிமுக- பாஜக கூட்டணி உறுதி இல்லை: பண்ருட்டி ராமச்சந்திரன்

அதிமுக- பாஜக கூட்டணி உறுதி செய்யப்படவில்லை என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் டிடிவி தினகரனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,  “. ஓபிஎஸ் & டிடிவி தினகரன் இனிமேல் இணைந்து செயல்படுவார்கள். இலக்கினை அடைய டிடிவிதினகரன், ஓபிஎஸ் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். கடந்தகாலத்தை பற்றி எதையும் பேச விரும்பவில்லை. கடந்த காலத்தை பற்றி பேசினால் பிளவுகளும், பேதங்களும்தான் வரும். அதிமுகவின் எதிர்காலம் கருதி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். எதிர்காலத்தை பற்றியே திட்டமிடுகிறோம். சமூக விரோத கும்பலிடமிருந்து அதிமுகவை மீட்பதே இரு கட்சிகளின் நோக்கம்.

பாஜகவுடன் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி மட்டுமே கூறிவருகிறார். அதிமுகவுடன் பாஜக கூட்டணி உருவாகியிருப்பதாக பாஜக மேலிடம் இதுவரை தெரிவிக்கவில்லை. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளை போல இணைந்து செயல்படுவார்கள். இரண்டு இயக்கமும் ஒன்று சேர முடிவு செய்துள்ளோம்” எனக் கூறினார்.

Image

முன்னதாக டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். டிடிவி தினகரனின் அடையாறு இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார். இன்று நடைபெற்ற சந்திப்பில், இணைந்து செயல்படுவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஓபிஎஸ் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரனை வாசலில் வந்து வரவேற்ற டிடிவி தினகரன், பொன்னாடை அணிவித்து கெளரவித்தார் என்பது குறிப்பிடதக்கது.