பாஜகவில் இருந்து பாக்கியராஜ் விலகல்! மிக்க மகிழ்ச்சியுடன் ராஜினாமா கடிதம்

 
அன்ன்

 தமிழக பாஜகவின் ஐடி விங்க் தலைவர் நிர்மல் குமார் வெளியேறி அதிமுகவில் இணைந்ததை அடுத்து பாஜகவில் இருந்து ஐடி விங்க் நிர்வாகிகள் பலரும் வெளியேறி வருகின்றனர் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

 அந்த வகையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் ஆர். பாக்கியராஜ் சமூக ஊடக பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவு பதவியில் இருந்தும்,  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் மிக்க மகிழ்ச்சியுடன் ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.

ப்

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  தர்மபுரி- கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் சமூக ஊடகப்பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவு பதவியில் இருந்தும் , பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் மிக்க மகிழ்ச்சியுடன் ராஜினாமா செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

 அவர் மேலும்,   தம்பி அண்ணாமலைக்கு... சகோதரர் சிடிஆர் நிர்மல் குமாரின் வளர்ச்சி பாஜகவிலும் சமூக ஊடகங்களிலும் தன்னைவிட அபரிமிதமான வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியவில்லை.  அதனால் அவரை வெளியேற்ற வேண்டும் என்று ஒரே முடிவில் இருந்தார் அண்ணாமலை.   ஏனென்றால் தன் இடத்திற்கு நிர்மல் குமார் வந்துவிடுவார் என்கிற அச்சம் தான் காரணம்.

 தம்பி அண்ணாமலை.. கடந்த  பிப்ரவரி மாதம் டெல்லி செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக,  ஐடி விங்க் மற்றும் விளையாட்டு திறன் மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளிடம் சர்வாதிகாரி போல் அரசியல் முதிர்வு இல்லாமல் நடந்து கொண்டதால்,  தங்களுக்கு நேர் எதிர் குணம் கொண்ட பொறுமை, நிதானம் , பண்பு, அன்பு, பாசம் , தெளிவு , அரசியலுக்கான சகிப்புத்தன்மை இருக்கும் நிர்மல் குமாரின் வழியில் பயணிப்பதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அதிமுகவில் இணைந்து நிர்மல்குமாரின் கீழ் பணிபுரியப்போவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.