பாஜகவில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு- தமிழகத்தை சேர்ந்தவர்கள் புறக்கணிப்பு

 
வாங்குன காரை நிறுத்த பார்க்கிங் இல்லாததே வாகன விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் – நிதின் கட்கரி 

 

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகள் குழுவை இன்று அறிவித்தார். 


அதன்படி பாஜகவில் 13 தேசிய துணைத் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பொருளாளராகவும், மேலும் 9 தேசிய பொதுச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அமைப்பு பொதுச்செயலாளராக பி.எல்.சந்தோஷ், தேசிய துணைத் தலைவராக வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் நியமிக்கப்பட்டுளனர். இதேபோல் தேசிய அளவிலும் புதிய நியமனங்களை மேற்கொண்டு பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாஜகவின் தேசிய செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கடேசன் உட்பட 16 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தேசிய பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று பாஜக அறிவித்த தேசிய அணியில் 65 நபர்களில் வெறும் 6 நபர்கள் மட்டுமே தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள். அந்த 6 நபர்களில் ஒருவர் தான் தமிழகம் என்பது குறிப்பிடதக்கது.