போராட்டத்தில் விவசாயிகள் இல்லையென்றால் அவர்களுடன் அரசாங்கம் ஏன் பேசுகிறது?.. ப.சிதம்பரம் கேள்வி

போராட்டத்தில் விவசாயிகள் இல்லையென்றால் அவர்களுடன் அரசாங்கம் ஏன் பேசுகிறது?.. ப.சிதம்பரம் கேள்வி

மத்திய பா.ஜ.க. அமைச்சர்களின் கருத்துப்படி, வேளாண் சட்டங்களை நீக்கக்கோரி நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தில் விவசாயிகள் இல்லையென்றால் அவர்களுடன் அரசாங்கம் ஏன் பேசுகிறது என்று ப.சிதம்பரம் கேள்வி கேட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளை காலிஸ்தானியர்கள், விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல் என்ற மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் மத்திய அரசை ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

போராட்டத்தில் விவசாயிகள் இல்லையென்றால் அவர்களுடன் அரசாங்கம் ஏன் பேசுகிறது?.. ப.சிதம்பரம் கேள்வி
ப.சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் டிவிட்டரில் தொடர்ச்சியான பதிவுகளில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை, காலிஸ்தானியர்கள், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஏஜெண்ட்டுகள், மாவோயிஸ்டுகள் மற்றும் சமீபத்திய துக்டே துக்டே கும்பல் என்று மத்திய அமைச்சர்கள் கூறுகின்றனர்.

போராட்டத்தில் விவசாயிகள் இல்லையென்றால் அவர்களுடன் அரசாங்கம் ஏன் பேசுகிறது?.. ப.சிதம்பரம் கேள்வி
விவசாயிகள் போராட்டம்

இப்படி அவர்களை நீங்கள் அனைத்து பிரிவுகளாக பிரித்தால், அங்கு ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களில் யாரும் விவசாயிகள் இல்லை என்று அர்த்தம். அவர்கள் விவசாயிகள் இல்லையென்றால் அரசாங்கம் அவர்களுடன் ஏன் பேசுகிறது? இவ்வாறு பதிவு செய்து இருந்தார்.