உத்தவ் தாக்கரே அப்படி பேசிய போது காங்கிரஸூம், தேசியவாத காங்கிரஸூம் வாய் திறக்கவில்லை.. அசாதுதீன் ஓவைசி

 
கடைசி நொடி வரை திட்டமிடாத, அரசியலமைப்புக்கு விரோதமான லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது….. மத்திய அரசு மீது அசாதுதீன் ஓவைசி தாக்கு

உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் பாபர் மசூதியை சிவ சேனாக்கள் அழித்ததில் பெருமிதம் கொள்கிறேன் என்று கூறியபோது, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அமைதியாக இருந்தது என்று அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டினார்.

மும்பையில் நடைபெற்ற திரங்கா யாத்திரையின் போது நடைபெற்ற கூட்டத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி பேசியதாவது: நான் இந்தியாவின் முஸ்லிம்களிடம் கேட்க விரும்புகிறேன், மதச்சார்பின்மையால் என்ன கிடைத்தது? மதச்சார்பின்மையால் நமக்கு இடஒதுக்கீடு கிடைத்ததா? மசூதியை இடித்தவர்களுக்கு தண்டனை கிடைத்ததா? இல்லை, யாருக்கும் எதுவும் கிடைக்கவில்லை.

உத்தவ் தாக்கரே

நான் அரசியலமைப்பு மதச்சார்பின்மையை நம்புகிறேன். அரசியல் மதச்சார்பின்மையில் அல்ல. அரசியல் மதச்சார்பின்மையில் சிக்கி கொள்ள வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மகாராஷ்டிராவில் பட்டதாரி முஸ்லிம்கள் 4.9 சதவீதம் மட்டுமே உள்ளதாக அரசு தரவுகள் கூறுகின்றன. நடுநிலைப்பள்ளியில் 13 சதவீத முஸ்லிம் மாணவர்கள் மட்டுமே உள்ளனர். மகாராஷ்டிராவில் 83 சதவீத முஸ்லிம்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை.

தேசியவாத காங்கிரஸ்

சிவ சேனா, பா.ஜ.க. மற்றும் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியிருந்தால், முஸ்லிம் குழந்தைகள் கல்வி கற்று இருப்பார்கள். மதச்சார்ப்பற்ற வாக்குகளை ஏ.ஐ.எம்.ஐ.எம். பிரித்ததாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. சிவ சேனா மதச்சார்பற்றதா? சிவ சேனா தலைவர் மற்றும் மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் பாபர் மசூதியை சிவ சேனாக்கள் அழித்ததில் பெருமிதம் கொள்கிறேன் என்று கூறியபோது, இந்த இரு கட்சிகளும் (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) அமைதி காத்தன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.