கங்கனா ரனாவத் மீது தேசத்துரோக வழக்கு பாயாதா?.. தேசத்துரோகம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும்தானா? ஓவைசி கேள்வி

 
‘பெண்களிடம் தகாத முறையில் பேசுகிறார்’: கரண் ஜோகர் குறித்து கங்கனா

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கங்கனா ரனாவத் மீது தேசத்துரோக வழக்கு பாயாதா?, தேசத்துரோகம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும்தானா? என்று மோடி மற்றும் யோகி ஆதித்ய நாத்திடம் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி கேட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 1947ல் இந்தியாவுக்கு கிடைத்த சுதந்திரம், சுதந்திரம் அல்ல. ஆனால் அது தானம் அல்லது யாசகம். 2014ல் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று தெரிவித்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கங்கனா ரனாவத் மீது தேசத்துரோக வழக்கு பாயாதா என்று பிரதமர் மோடி மற்றும் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவிடம் அசாதுதீன் ஓவைசி கேள்வி கேட்டுள்ளார்.

தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?.. உத்தர பிரதேச அரசை சாடிய அசாதுதீன் ஓவைசி

உத்தர பிரதேசம் அலிகாரில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அசாதுதீன் ஓவைசி பேசுகையில் கூறியதாவது:  ஒரு பெண்மணி (கங்கனா ரனாவத்) மிக உயரிய சிவிலியன் விருதை பெற்றுள்ளார். அவர் ஒரு நேர்காணலில், இந்தியா 2014ல் தான் சுதந்திரம் பெற்றது என்று கூறினார். அந்த பெண்மணி சொன்னதை ஒரு முஸ்லிம் சொல்லியிருந்தால், அவர் முழங்காலில் சுடப்பட்ட பிறகு, அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டு இருப்பார்.

யோகி ஆதித்யநாத், மோடி

இந்த வார்த்தை எந்த முஸ்லிமும் சொல்லியிருந்தால் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டிருப்பார். அவள் ஒரு ராணி, நீங்கள் ராஜா. எனவே நீங்கள் எதுவும் செய்ய மாட்டீர்கள். இந்தியா-பாகிஸ்தான் (டி20 உலக கோப்பை) போட்டி குறித்து  யாராவது கருத்து தெரிவிக்க துணிந்தால், தேசத்துரோக வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்புவோம் என்று பாபா (யோகி ஆதித்யநாத்) மிரட்டினார். கங்கனா ரனாவத் மீது தேசத்துரோக வழக்கு சுமத்தப்படுமா என்பதை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் மோடியிடம் இருந் தெரிந்த கொள்ள வேண்டும். தேசத்துரோகம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும்தானா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.