மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் சம்மதம்

 
ந் ந்

டிசம்பர் 10 அன்று எடப்பாடி அறிவித்திருந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் முடிவும் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ops eps

"டிசம்பர் 15க்குள் முடிவு எடுக்காவிட்டால் தனிக்கட்சியை தொடங்குவோம்" என்று எடப்பாடிக்கு கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று ஓபிஎஸ் திடீரென டெல்லி சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவர் பாஜகவுடன் மீண்டும் இணைவாரா, தனிக்கட்சி அறிவிப்பாரா அல்லது அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்படுவாரா என்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. இதற்கிடையில் துக்ளக் குருமூர்த்தியும் அவருடன் டெல்லி பயணத்தில் உள்ளார்.

பாஜக முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு நடைபெற்றதாகவும், ஓபிஎஸ்ஸை கட்சியில் மீண்டும் சேர்ப்பதை தவிர வேறு வழி இல்லை என்பதால் அதற்கு எடப்பாடி சம்மதித்துவிட்டார் என்ற தகவல்களும் வருகின்றன. மேலும், டிசம்பர் 10 அன்று எடப்பாடி அறிவித்திருந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் முடிவும் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது எடப்பாடிக்கு மிகவும் பின்னடைவாக கருதப்படுகிறது.