டி.டிவி. தினகரனை சந்திக்க முயற்சிக்கும் ஓபிஎஸ் – கோபத்தில் அதிமுக தொண்டர்கள்

 

டி.டிவி. தினகரனை சந்திக்க முயற்சிக்கும் ஓபிஎஸ் – கோபத்தில் அதிமுக தொண்டர்கள்

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்கிற குழப்பத்தை உருவாக்கியுள்ள ஓ. பன்னீர்செலவம், அதை முன்வைத்து கட்சியில் பிரதான பதவிக்கு பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,
அம்மா முன்னேற்ற கழக தலைவர் டி டி வி தினகரனுடன் இணைந்து செயல்படுவதற்கான ஆலோசனைகளை செய்து வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கூறும் அவர்கள், டிடிவி தினகரனுக்கு நெருக்கமானவர்களுடன் ஓ.பி.எஸ் பேசியதாக கூறுகின்றனர்.

டி.டிவி. தினகரனை சந்திக்க முயற்சிக்கும் ஓபிஎஸ் – கோபத்தில் அதிமுக தொண்டர்கள்

ஓ.பி.எஸ் வட்டார நிலவரங்களை அறிந்தவர்கள் கூறுகையில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து செயல்பட்டால் தற்போதைய சர்ச்சைகளுக்கு முடிவு கிடைக்கும் என ஓ.பி.எஸ் நம்புகிறாராம்.

வரும் 7 ஆம் தேதிக்குள், முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என தலைமை அறிவித்துள்ளது. இந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் வரும் 6 ஆம் தேதி சென்னை வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் வரும் திங்கள்கிழமைக்குள் இது தொடர்பாக இறுதி முடிவு எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

டி.டிவி. தினகரனை சந்திக்க முயற்சிக்கும் ஓபிஎஸ் – கோபத்தில் அதிமுக தொண்டர்கள்

முதலமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும், அல்லது கட்சியை வழிநடத்தும் குழுவை தன் தலைமையில் அமைக்க வேண்டும் என ஓ.பி.எஸ் வலியுறுத்துகிறார். இதை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஏற்றுக்கொள்ளாத நிலையில், ஓ.பி.எஸ் தரப்பு சசிகலா அன்ட் குழுவை அணுகும் முடிவை எடுத்துள்ளது. ஆனால் தினகரன் தற்போது நேரடியாக எந்த பதிலும் சொல்லவில்லையாம்.

அதிமுகவின் தற்போதைய சர்சைகளை கவனித்துவரும் பாஜக மேலிடம், தற்போது தலையிட வேண்டாம் என முடிவு செய்துள்ளதாம். அதிமுகவின் உள் விஷயங்களில் தலையிட விரும்பவில்லை என பாஜக மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளார்களாம்.

டி.டிவி. தினகரனை சந்திக்க முயற்சிக்கும் ஓபிஎஸ் – கோபத்தில் அதிமுக தொண்டர்கள்

கடந்த வாரத்தில் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மற்றும் பி. தங்கமணி ஆகியோர் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்துள்ளனர். அப்போது, தங்களை அணுகுவதற்கு முன், கட்சியின் உள் விவகாரங்களை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்றார்களாம். அமைச்சர்கள் செல்வதற்கு முன்பிருந்தே ஒ.பன்னீர்செல்வமும் பல வழிகளில் பாஜக தலைமையை சந்திக்க முயன்றுள்ளார். ஆனால் அவருக்கு சந்திக்க அனுமதி கிடைக்கவில்லையாம். இந்த நிலையில்தான், டி.டி.வி தினகரனை அணுகும் முடிவுக்கு ஓ.பி.எஸ் வந்துள்ளதாக கூறுகின்றனர்.

பாஜக மேலிடம் கை கழுவிய நிலையில், டி.டி.வி தினகரனுடன் ரகசிய பேச்சுவார்த்தைக்கு முயற்சிக்கும் நிலையில் ஓ.பி.எஸ் மீது சொந்த கட்சியினர் கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.