நீ மீசை வச்ச ஆம்பளையா இருந்தா, வேட்டி கட்டுன ஆம்பிளையா இருந்தா..இபிஎஸ்க்கு ஓபிஎஸ் ஆதரவாளர் சவால்

 
eo

 நீ மீசை வச்ச ஆம்பளையா இருந்தா.. வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா.. என்று,  ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்டார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.   இப்போது அதே மாதிரி,   நீ மீசை வச்ச ஆம்பளையா இருந்தா.. வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா. என்று ஓபிஎஸ் ஆதரவாளர் இபிஎஸ்க்கு சவால் விட்டிருக்கிறார்.

v

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்தை தாக்கல் செய்து உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றி தரவேண்டும் என்று தெரிவித்தார்.  இதை தாடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக, விசிக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளாக ஒரு உறுப்பினர் மசோதாவை ஆதரித்து பேசினர். 

ma

அப்போது அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம், இந்தச் சட்டத்தை முழுமையாக அதிமுக ஆதரிக்கிறது என்று கூறினார்.அவரை தொடர்ந்து பேசிய  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் கொண்டுவந்த தடை சட்டத்தை விவாதம் இன்றி  ஒருமனதாக நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் விவாதம் நடைபெறுவதாகவும், அதிமுக சார்பாக சட்ட மசாதாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார்.

‘அதிமுக சார்பாக’ என பேசிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கடும் கண்டனக்குரல் எழுப்பினர்.

இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ்பாண்டியன், வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு இபிஎஸ் ஆதரவாளர்கள் மீது அடிக்கப்பாய்ந்தார்.  ஓபிஎஸ் -இபிஎஸ் அணிகளை மோதவிட்டு திமுக வேடிக்கை பார்க்கிறது என்று இபிஎஸ் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

o

இந்நிலையில்,  ஓபிஎஸ் ஆதரவாளர் மருதுஅழகுராஜ்,   ‘’அண்ணன் ஓ.பி.எஸ்ஸை பேச அழைத்தார் என்று சட்டப் பேரவை தலைவரிடம் மல்லுக்கு நிற்கும் மடப்பாடி...
நாடாளுமன்றத்தில்  ஓ.பி.ரவீந்திரநாத்தை  அ.தி.மு.க. உறுப்பினர் என்று பாராளுமன்ற சபாநாயகர் குறிப்பிடுவதை எதிர்த்து  தன் அல்லக்கைகள் சகிதமாக எடப்பாடி பாராளுமன்றத்தை நோக்கி படைதிரட்டி  போவாரா... நீ  மீசை வச்ச ஆம்பளையா இருந்தா வேட்டி கட்டுன ஆம்பிளையா இருந்தா  மொதல்ல நீ அதை செய் பார்ப்போம் .
என்ன நாஞ் சொல்றது..’’ என்று சவால் விட்டிருக்கிறார்.