ஓபிஎஸ் மகன், டிடிவி தினகரன் தாமரை சின்னத்தில் போட்டியா?

 
tt

 ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தேனி தொகுதியிலும் , டிடிவி தினகரன் சிவகங்கை தொகுதியில் போட்டியிட பாஜக ஓகே சொல்லி இருக்கிறது என்றும்,  இருவரும் தாமரை சின்னத்தில் போட்டியிட இருக்கிறார்கள் என்று தகவல் பரவுகிறது.

 அண்ணாமலைக்கும் அதிமுகவினருக்கும் இடையே நடந்து வந்த தொடர் கருத்து மோதலால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி தொடருமா என்ற கேள்வி இருந்தது.   டெல்லியில் அமித்ஷா மற்றும் நட்டாவை பழனிச்சாமியும் அவரது அணியினரும் சந்தித்து பேசிய பின்னர் அதிமுக பாஜக கூட்டணி தொடருவது உறுதியாகியிருக்கிறது .  இதன் பின்னர்,  அண்ணாமலைக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று பழனிச்சாமி சொல்ல,  பழனிச்சாமிக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று அண்ணாமலையும் சொல்லி இருக்கிறார்.

a

 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடியை ஏற்றுக்கொண்டு அதிமுக செயல்பட முடிவெடுத்திருக்கிறது.  இந்த நிலையில் கொடுக்கின்ற இடத்தில் அதிமுக இல்லை.  கைநீட்டி வாங்கும் இடத்தில் பாஜகவும் இல்லை என்று பாஜகவின் மாநில பொருளாளர் எஸ். ஆர். சேகர் சொன்னது மீண்டும் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது .  இது அண்ணாமலைக்கு தெரியுமா தெரியாதா? அண்ணாமலையின் அனுமதியுடன் தான் இது பேசப்பட்டதா? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆத்திரப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி மனதின் குரல் நூறாவது வானொலி உரை சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள நடுக்குப்பத்தில் பொதுமக்கள் கேட்டு ரசிக்கும் விதமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.  இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,   அண்ணன் எடப்பாடியாரும் நானும் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியிலும் வெற்றி பெற்று நாற்பதையும் கைப்பற்ற வேண்டும் என்ற விருப்பத்தை பாஜக மேல் இட தலைவர்களிடம் சொன்னோம் .  அவர்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள்.   பாஜக அதிமுக கூட்டணிக்கு தலைமை யார் என்பது பற்றி பேசுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை . கூட்டணியில் இருக்கும் அதிமுக பெரிய கட்சி.  கூட்டணியில் முகம் மோடி தான்.  தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்பதை தலைமை முடிவெடுக்கும்.  

am

 சில தலைவர்கள் மோடியுடன் பயணித்திருக்கிறார்கள்.  அவர்களையும் விட்டுக் கொடுக்க முடியாது.  அதே நேரம் இன்னொரு கட்சியையும் தர்ம சங்கடப்படுத்தி விட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

 பிரதமர் மோடி சொன்னபடி தான்  பன்னீர்செல்வம் இதுவரைக்கும் நடந்து கொண்டிருக்கிறார் என்பது அவரே பேட்டியின் மூலம் கூறியிருக்கிறார்.  அப்படி இருக்கும்போது எடப்பாடியுடனான அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஓபிஎஸ்ஐ கழட்டி விட முடியாது என்று பாஜக நினைப்பதாகவே அண்ணாமலையின் பேச்சின் மூலம் தெரிகிறது.  அதனால் கடந்த முறை தேனி தொகுதியில் போட்டியிட்ட  ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு இந்த முறை தேனி தொகுதியை பாஜக ஒதுக்கும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு சிவகங்கை தொகுதியினை பாஜக ஒதுக்கும்  என்றும் பேச்சு எழுந்திருக்கிறது. 

o

 சிவகங்கை தொகுதியில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா இந்த முறை போட்டியிடப் போவதில்லை.  அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டதால் அந்த தொகுதியை தினகரனுக்கு ஒதுக்க பாஜக முடிவு செய்திருப்பதாகவே தெரிகிறது.  டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியை பாஜக ஒழுக்கும் என்றும் தெரிகிறது.

ரவீந்திரநாத்துக்கும் டிடிவி தினகரன் பாஜக சீட் ஒதுக்குவது மட்டுமில்லாமல் தாமரை சின்னத்தில் போட்டியிட அனுமதி வழங்கும் என்றும் பேச்சு இருந்திருக்கிறது இது அதிமுகவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.  இதையெல்லாம் கணக்கில் வைத்து மனதில் வைத்து தான் தேசியத் தலைமை, கூட்டணி குறித்து முடிவு எடுத்து கூட்டணி கட்சி தலைவர்களை சமாதானப்படுத்தும்  என்று சூசகமாக சொல்லி இருக்கிறார் அண்ணாமலை.