பாஜகவுடன் நெருக்கமான ஓபிஎஸ்; பிரதமர் மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு

 
ops

குஜராத் சட்டமன்ற தேர்தலில், பாஜக மொத்தம் உள்ள 182 இடங்களில் 156 இடங்களில் வெற்றி பெற்றது.  ஏழாவது முறையாக பாஜக மீண்டும் குஜராத் மாநிலத்தை ஆளும் அதிகாரத்தை பெற்று இருக்கிறது.

ரவி

குஜராத்தின் 18வது முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றார். ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குஜராத் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பின் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நட்டா மற்றும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அதிமுக இரு அணிகளாக பிரிந்துகிடக்கும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  

Image
 

முன்னதாக ஓபிஎஸ் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்தித்து பேசினார். ஓ.பி.எஸ்-க்கு, குஜராத் மாநில பாஜக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்