ஓபிஎஸ் அழைக்கிறார்! எரிமலையாய் வெடிப்போம்! எடப்பாடி சதிவலையை தகர்ப்போம்!

 
ஒ

அதிமுகவில் ஒற்றைத் தலைமை  விவகாரத்தால் எடப்பாடி பழனிச்சாமி விஸ்வரூபம் எடுத்து கட்சி மொத்தத்தையும் தனக்கு கீழ் கொண்டு வந்து விட்டார்.   அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் ஆகிவிட்டார்.  இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.  இந்த சட்டப் போராட்டம் ஒருவேளை தோல்வியில் முடியும் என்று நினைத்து தான் முன்னதாகவே தனது பலத்தை நிரூபிக்க முடிவு எடுத்து விட்டார். 

ஜ்

 திருச்சியில் வரும் 24ஆம் தேதி மாநாட்டை கூட்டி இருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம் .  இந்த மாநாட்டின் மூலம் அதிமுகவில் இருக்கும் தனது ஆதரவாளர்களை தன் பக்கம் இழுத்து தன் பலத்தை காட்ட நினைக்கிறார்.  இது குறித்து ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் மருது அழகுராஜ்  தனது வலைத்தள பக்கத்தில்,   ‘திருச்சி பொன்மலையும் தீச்சுவாலை எரிமலையும்’ என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:


உனக்கும்
எனக்கும்
புரட்சித் தலைவர் தந்த
உரிமையை பறித்து..
ஒன்றரைக் கோடி
தொண்டர்கள்
உயிராக
துதிக்கும்
புரட்சித் தலைவி
அம்மாவை
நிரந்தர பொதுச்செயலாளர் பதவியிலிருந்தே நீக்கி..

மக்கள் திலகமும்
மகராசி
தாயும்
கையெழுத்திட்ட
உறுப்பினர்
அட்டைகள்
செல்லாதென
மிரட்டி
அம்மா
அடையாளம்
காட்டிய
கழகத்தின்
பரதனாம்
அண்ணன்
ஓ.பி.எஸ்ஸை
அவமானப் படுத்தி..

சாதிமத
பேதமில்லா
சமத்துவ
இயக்கத்தை
சாதிக்குள்
அடைத்து..

கோலமகள்
வாசம் செய்த
கொடநாடு
கோவிலில்
கொலை கொள்ளை
நடத்தி..

பச்சிலையாம்
ரெட்டை இலையை
தொடர்
தோல்வியில்
ஆழ்த்தி 
எடப்பாடி
பல்லுச்
சாமியும்
அவரது
எடுபிடிகளும்
நடத்துகிற
அரசியல் 
அபகரிப்பை
அடியோடு 
முறியடிக்க
கழகமே
உலகமென
வாழும்
மூவர்ண
இயக்கத்தின்
மூச்சான
தொண்டர்களே..

காவேரிக்
கரைக்கு
கடலெனவே
திரண்டு வாரீர்
ஒன்றரைக் கோடி
தொண்டர்களின்
உரிமை
காக்க..

ஒப்பில்லா
தாய் தந்த
தப்பில்லா
தங்க மகன்
ஓ.பி.எஸ்
அழைக்கிறார்.

எரிமலையாய்
வெடிப்போம்
எடப்பாடி சதிவலையை
தகர்ப்போம்