முன்கூட்டியே தேர்தல் முடிவு அறிவிப்பு... ஓபிஎஸ், இபிஎஸ் வெற்றி - என்ன காரணம்?

 
ஓபிஎஸ் எடப்பாடி

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்தபின் சசிகலா பொதுச்செயலாளரானார். முதலமைச்சராக காய் நகத்தியபோதே சிறை சென்றார். ஓபிஎஸ் தர்மயுத்தமும் இதில் அடக்கம். சசிகலா கைகாட்டி விட்ட எடப்பாடி, எம்எல்ஏக்களின் பலத்தால் ஆட்சியமைத்தார். ஆனால் அதற்குப் பின் ஓபிஎஸ்ஸும் எடப்பாடியும் கைகோர்க்க சசிகலாவும் தினகரனும் ஓரங்கட்டப்பட்டனர். பொதுச்செயலாளர் பதவியை நீக்கினர். நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் எனக்கூறி சசிகலாவுக்கு கேட் போட்டனர்.

BigBreaking || ஓபிஎஸ், இபிஎஸ் குறித்து சசிகலா சற்றுமுன் பரபரப்பு பேட்டி.!  தேர்தலுக்கு தயார்.! - Seithipunal

அதற்குப் பின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு, ஓபிஎஸ், எடப்பாடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். கட்சி சட்ட விதிகளும் திருத்தப்பட்டன. இரட்டை தலைமையில் சவாரி செய்த அதிமுக சட்டப்பேரவை தேர்தல், மக்களவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலும் படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் கட்சிக்குள் ஒற்றை தலைமை கோரிக்கை எழுந்தது. அவ்வப்போது பொதுச்செயலாளர் என்ற லெட்டர்பேடில் சசிகலா அறிக்கையும் வெளியிட்டார்.

சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ் வைத்த கோரிக்கை... ஏற்றுக்கொண்ட காவல்துறை! |  nakkheeran

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செயற்குழு கூட்டத்தில் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவது ரத்து செய்யப்பட்டது. பொதுச்செயலாளர் போல் இவர்களும் நேரடியாக தொண்டர்களால் தேர்வு செய்யப்படுவார்கள் என விதி திருத்தப்பட்டது. இதையடுத்து நாளை (டிச.7) அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடப்பதாகவும், டிச. 3,4 தேதிகளில் வேட்பு மனு தாக்கல் 5ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை என அறிவிக்கப்பட்டது. 

Former minister Ponnaiyan confessed || சமூகவலைதளங்களில் வந்த தகவல்கள்  அடிப்படையிலேயேஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தேன்முன்னாள் ...

ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓபிஎஸ்ஸும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியும் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேறு யாரும் தாக்கல் செய்யவில்லை. ஆனால் இந்த உட்கட்சி தேர்தலை ரத்துசெய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்துள்ளனர். இருவரையும் எதிர்த்து யாரும் போட்டியிடாததாலும் வேட்புமனுக்களை பரிசீலனை செய்தபோது அது கட்சி விதி 20(2)-ன் படி சரியாக இருந்ததாலும் இருவரையும் போட்டியின்றி தேர்வு செய்வதாக அறிவிக்கப்பட்டது.