தனி கட்சி தொடங்கப்போவதில்லை; அதிமுகவை மீட்டெடுப்பதே இலக்கு- ஓபிஎஸ்

 
OPS

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கொங்கு மண்டலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளுக்கு பயணம் செய்த ஓபிஎஸ் நேற்று நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். நாமக்கல் கிழக்கு மாவட்டம், நாமக்கல் மேற்கு மாவட்டம் ஆகியவை ஒருங்கிணைந்து திருச்செங்கோடு கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாலை ஆறு முப்பது மணி அளவில் வருகை புரிந்த ஓபிஎஸ்க்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

Image

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “கொங்கு மண்டலம் புரட்சி தலைவி அம்மாவின் கோட்டை என மேலும் ஒரு முறை நிரூபணம் ஆகி உள்ளது. கடந்த காலங்களில் கோவையில் மக்களை சந்திக்க வந்த போது எனக்கு கிடைத்த வரவேற்பு ஈபிஎஸ் குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த இயக்கத்தின் தொண்டன் என்று சொன்னால் தமிழக மக்களிடம் நல்ல மரியாதை இருந்தது. இன்று அது இரண்டாக முன்றாக பிரிந்து கேள்விகுறி ? ஆகி விட்டது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இந்த கழகத்தை துவங்கிய போது லட்சக்கணக்கில் இருந்த தொண்டர்கள், தற்போது ஒன்றரை கோடியாக உயர்ந்துள்ளனர்.  புரட்சித்தலைவி காலமானதற்கு பிறகு சசிகலாவால் பதவிக்கு கொண்டுவரப்பட்ட ஈபிஎஸ் நம்பிக்கை துரோகம் செய்வார் என்று நான் எண்ணவில்லை.

Image

அதிமுக சட்டவிதிகளின்படி, சாதாரண தொண்டனும் பதவி ஏற்க முடியும் என்ற விதி படி  நாங்கள் பதவி ஏற்றோம். தற்போது 10 மாவட்டச் செயலாளர் முன்மொழியவும், 10 மாவட்டச் செயலாளர் வழிமொழியவும் தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர்கள் ஐந்து பேர் வழிகாட்ட க்கூடிய நபர் தான் பொதுச்செயலாளராக வரமுடியும். அதே நிலையை மீண்டும் நாங்கள் உருவாக்குவோம். நாடாளுமன்ற தேர்தலில் நான் தனி கட்சி தொடங்கப்போவது இல்லை. அசுரர்கள் கையில் இருக்கும் அதிமுகவை மீட்டு எடுப்பதே நம் இலக்கு” என்றார்.