அண்ணாமலையின் கடின உழைப்பே பாஜக வாக்கு சதவீதம் உயர காரணம்- ஓபிஎஸ்

 
ops

அ.தி.மு.க.வின் பிரிந்திருக்கும் சக்திகள் ஒன்றிணையவில்லை என்றால் எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

பாஜகவின் வெற்றிக்காக 24 மணிநேரமும் பாடுபட்ட அண்ணாமலை: ஓபிஎஸ்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “பாஜகவின் வெற்றிக்காக 24 மணிநேரமும் பாடுபட்டவர் அண்ணாமலை. மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. அண்ணாமலை அரும்பாடு பட்டதால் பாஜகவிற்கு இந்த வாக்கு சதவீதம் கிடைக்க காரணம். அண்ணாமலை 24 மணிநேரமும் பாஜக வளர்ச்சிக்காக உழைத்தார்.அதிமுகவில் பிரிந்திருப்பவர்கள் ஒன்றிணையவில்லை என்றால் எந்த காலத்திலும் அதிமுக வெற்றி பெற முடியாது.

என்னுடைய மற்றும் அமமுகவின் வாக்கு வங்கி பாஜகவுக்கு தேர்தலின் போது செல்வதால் நாங்கள் பலவீனம் அடையப்போவதில்லை. எங்கள் வாக்கு வங்கியையும் தாண்டி, பாஜகவின் வாக்கு சதவீதம் உயர, 24 மணி நேரமும் அதற்காக உழைத்த அண்ணாமலையும் ஒரு காரணம்” என்றார்.