"நான் ஒன்றிய அமைச்சராவது இறைவன் கையில் உள்ளது"- ஓபிஎஸ்
நான் ஒன்றிய அமைச்சராவது இறைவன் கையில் உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் இந்திய திருநாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்காக நடைபெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவதற்கு நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மை பலத்துடன் பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்படுவார். அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே இயக்கம் அதிமுக உரிமை மீட்புக் குழு.
ராமநாதபுரத்தில் என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எந்த பலன்களையும் எதிர்பார்த்து வேலை செய்வது இல்லை. நான் ஒன்றிய அமைச்சராவது இறைவன் கையில் உள்ளது. நான் கட்சிக்கு விசுவாசமாக உழைப்பவன். என்னை பொருத்தவரை பலன்களை எதிர்பார்த்து கட்சி வேலை செய்பவன் அல்ல நான்” என்றார்.