பாஜக இல்லாமல் அதிமுகவால் தனித்து வெற்றி பெற முடியாது- ஓ.பன்னீர்செல்வம்

 
ops

பாஜக இல்லாமல் அதிமுகவால் தனித்து வெற்றி பெற முடியாது- ஓ.பன்னீர்செல்வம் பாஜக இல்லாமல் அதிமுகவால் தனித்து வெற்றி பெற முடியாது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

op

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், இதன் எதிரொலியாக பாஜக-அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனிமேல் ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை எனவும் அதிமுக அறிவித்தது. இதனிடையே ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி,  கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.   சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் தினகரனை  சந்தித்து அவருடன் இணைந்து செயல்பட போவதாக அறிவித்தார். 

இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “பாஜக இன்றி அதிமுகவால் தனித்து வெல்ல முடியாது. ஒன்றுபட்டால்தான் தேர்தல்களில் வெற்றி பெற முடியும். ஈபிஎஸ்க்கு நான் தூது அனுப்பியதாக கூறுவது வடிகட்டிய பொய். நானும், டிடிவி தினகரனும் இண்ந்து செயல்படுகிறோம். சசிகலா எங்களுடன் வருவது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.