சசிகலாவை சந்திக்காதது ஏன்? சபரீசனை சந்தித்தது ஏன்?- ஓபிஎஸ் பதில்

 
ops

டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். டிடிவி தினகரனின் அடையாறு இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார். இன்று நடைபெற்ற சந்திப்பில், இணைந்து செயல்படுவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஓபிஎஸ் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரனை வாசலில் வந்து வரவேற்ற டிடிவி தினகரன், பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.

ttvdhinakaran

சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “கடந்த காலங்களை மறந்துவிட்டு, நானும் டிடிவி தினகரனும் ஒன்றிணைந்துள்ளோம். சசிகலா வெளியூர் சென்றிருப்பதால் அவர்களை சந்திக்க முடியவில்லை. வெளியூர் சென்றுள்ள சசிகலாவை விரைவில் சந்திப்பேன். தொண்டர்கள் மக்கள் மனதில் உள்ளவற்றை அடிப்படையாக கொண்டு செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் அனைத்து அடிப்படை தொண்டர்களும் இணையவேண்டும் என்பதனையே நோக்கமாக கொண்டுள்ளனர்.

கிரிக்கெட் போட்டியை பார்க்கச் சென்றபோது மரியாதை நிமித்தமாகவே சபரீசனை சந்தித்தேன். சபரீசனுடனான சந்திப்பு தற்செயலானது” என்றார்.