நரேந்திர மோடி நம்பர் ஒன் பொய்யர், யோகி ஆதித்யநாத் நம்பர் 2... ஓம் பிரகாஷ் ராஜ்பர் தாக்கு

 
மோடி

நரேந்திர மோடி நம்பர் ஒன் பொய்யர், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பர் 2 பொய்யர் என்று எஸ்.பி.எஸ்.பி. கட்சி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் தெரிவித்தார். 

உத்தர பிரதேசத்தில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்.பி.எஸ்.பி.). இந்த கட்சியன் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் தாரா சிங் சவுகான் (பா.ஜ.க.விலிருந்து விலகிய அமைச்சர்கள்) ஆகியோர் அகிலேஷ் யாதவுடன் நிற்கும் நாள் உத்தர பிரதேசம் புதிய திசையை பெறும்.

ராஜ்பர்

பிரதமர் நரேந்திர மோடி நம்பர் ஒன் பொய்யர், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பர் 2 பொய்யர். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன் பா.ஜ.க.விலிருந்து விலகிய சுவாமி பிரசாத் மவுரியா கூறியதாவது: விவசாயிகள் ஒராண்டு காலமாக சாலைகளில் இருந்தனர், பா.ஜ.க. ஆட்சியில் ஏழை மக்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்கவில்லை, பணியிடங்கள் அனைத்தும் காலியாக உள்ளது.

உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு தடை; அதிர்ச்சி கிளப்பும் யோகி

மாநில அரசு அனைத்தும் தனியார் நிறுவனங்களின் கையில் கொடுத்து வருகிறது. முதலாளிகளுக்கு ஊக்கம் கிடைக்கிறது. அரசு தனது பொறுப்புகளிலிருந்து எப்படி விலக முடியும்?. இதர பிற்படுத்தப்பட்ட பகுதியினரின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்ததால் நான் இந்த முடிவை (அமைச்சர் பதவி ராஜினாமா, பா.ஜ.க.விலிருந்து விலகல்) எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.