#BREAKING சசிகலா, டிடிவி தினகரனை நேரில் சந்தித்து நானே அழைப்பு விடுப்பேன் - ஓபிஎஸ்
அதிமுகவின் நலன் கருதி சசிகலா மற்றும் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து நானே அழைப்பு விடுப்பேன் என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து அதிமுக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆதரவு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ஓ, பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய, ஓ.பன்னீர் செல்வம். “அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என ஏற்கனவே சொல்லிவிட்டேன். இரு தரப்பையும் இணைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விரைவில் புரட்சி பயணம் மேற்கொள்ள உள்ளேன். மேலும், பலர் தன் பக்கம் வர உள்ளார்கள். அது யார் என்பது பரம ரகசியம். ஆறுமுக சாமி ஆணைய அறிக்கையை முழுமையாக படித்த பின்பு தான் கருத்து சொல்ல முடியும். கட்சியின் நலன் கருதி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பேன்” எனக் கூறினார்.