"நான் உங்கள பாத்து ஒன்னும் செருப்ப காட்டலயே" - திருமா மீது பாய்ந்த சீமான்!

 
சீமான்

அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசிய சீமான், மேடை நாகரிகத்தை மீறி திமுகவை சங்கி என திட்டி செருப்பை அடிப்பேன் எனக்கூறி அதை தூக்கியும் காட்டினார். இது திமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தருமபுரியில் நடைபெற்ற நாம் தமிழர் கூட்டத்தில் திமுக நிர்வாகி செங்கண்ணன் என்பவர் ரகளையில் ஈடுபட்டார். நாம் தமிழர் கட்சி பிரமுகர் ஹிம்லர் திமுகவையும் முதலமைச்சர் ஸ்டாலினையும் இழிவாகப் பேசியதால் தாக்கினார்.

திருமாவளவன் இல்லாத ஒன்றைச் சொல்லவில்லை. எதிர்க்கிறார்கள் என அவர் பின்  வாங்கப்போவதுமில்லை' - சீமான்

இந்த விவகாரம் பெரும் விவாதமானது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திமுகவின் தோழமை கட்சியான விசிகவின் தலைவர் திருமாவளவன், "கருத்துக்கு கருத்துதான் எடுத்து வைக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் திமுக தலைமைக்கு உடன்பாடு இருக்காது என்றே நினைக்கிறேன். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார். இதற்கு நன்றி தெரிவித்து சீமான் ட்வீட் செய்தார். இதனால் திருமாவே இப்படி சொல்லிவிட்டாரே என திமுக ஆதரவாளர்கள் வேதனைப்பட்டனர்.

அவரின் கோபம் நியாயமானது தான்.. ஆனால்'..! சீமானுக்கு அட்வைஸ் செய்த  திருமாவளவன்..!

அடுத்த பேட்டியில் சீமான் செயல் குறித்து பேசிய திருமா, "சீமான் மேடையில் செருப்பை தூக்கி காண்பிப்பதை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது , அந்த போக்கு கவலை வேதனை அளிக்கிறது , கண்டனத்திற்குரியது" என்றார். இதுதொடர்பாக இன்று சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "நான் செருப்பு காட்டியதை, சாதாரணமாக விட்டுவிடக்கூடாது என்று எங்க அண்ணன் திருமாவளவன் பேசியிருக்கிறார். நான் அவருக்கு எதிராகக் காட்டவில்லையே. அவர் எனக்கு எதிராகப் பேசலாம். நான் அவருக்கு எதிராகப் பேசுவதில்லை. இனியும் பேசப் போவதில்லை” என்று கூறினார்.