’ஆதரவுக்கும், கண்டனத்திற்கும் நன்றி...’- இபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த சீமான்....

 
சீமான்

நாம் தமிழர் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், திமுகவின் அட்டூழியத்தைக் கண்டித்தும் அறிக்கை வெளியிட்ட  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.  

தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று மேடையில் ஏறிய திமுக மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் உள்ளிட்ட சிலர், ,  மேடையிலிருந்த நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  இதனையடுத்து பலரும் திமுக நிர்வாகிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நெல் கொள்முதலை துரிதப்படுத்துங்கள்; திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

அந்தவகையில் நேற்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி  கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தாஎ. அதில், ஜனநாயக முறைப்படி நாம் தமிழர் கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் , கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக-வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  எதிர்க்கட்சியினர் மீது ஆளும் கட்சியினர் நடத்தும் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.

சீமான் அறிக்கை

இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,  எடப்பாடி பழனிசாமியின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைகோரிய ஆர்ப்பாட்டத்தில், அத்துமீறி நுழைந்து கொலைவெறித்தாக்குதல் நடத்திய திமுக குண்டர்கள் மீதும், வேடிக்கைப் பார்த்த காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும், அதிகாரத்திமிரில் சனநாயக மரபுகளைக் குழிதோண்டிப் புதைத்து ஆணவத்தோடு செயல்படும் திமுகவினரின் அட்டூழியத்தைக் கண்டித்துமென அறிக்கை வெளியிட்ட  சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான ஐயா எடப்பாடி பழனிசாமி
  அவர்களுக்கு எனது அன்புகலந்த நன்றியும், வணக்கமும்!.. ” என்று குறிப்பிட்டுள்ளார்.