பாத்திரத்தை மட்டும்தான் கழுவவில்லை - திமுக அமைச்சர்களை விளாசும் ஜெயக்குமார்

 
j

பாத்திரத்தை மட்டும்தான் கழுவவில்லை.  மற்றபடி எல்லாவற்றையும் செய்து விட்டார்கள் என்று திமுக அமைச்சர்களை கடுமையாக சாடி இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

க்க்

 சிங்காரவேலன்  அவர்களின்  164 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.   அதன் பின்னர் அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர் .  

அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சனம் செய்து வருவது குறித்த கேள்விக்கு, எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்யும் கனிமொழிக்கு பழைய வரலாறு தெரியாது.  அதிமுக ஆட்சியை கலைத்த இந்திரா காந்தியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்தவர் கருணாநிதி என்று சொன்னவர்,   ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்யும் திமுக அமைச்சர்களை கடுமையாக சாடினார்.

 புரோட்டா போட்டு பிரச்சாரம் செய்யும் அமைச்சர்களை , ஆம்ளேட், டீ போடும் திமுக அமைச்சர்கள் பாத்திரத்தை மட்டும்தான் கழுவவில்லை என்று கடுமையாக சாடினார். 

திமுக ஆட்சி குறித்த கேள்விக்கு,   திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தீக்குளிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்று குற்றம் சாட்டினார் . அதிமுக ஆட்சி காலத்தில் இலங்கை பயந்து இருந்தது.  திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டன .  இடைத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு காங்கிரஸ் மீது திமுக பழியை போடும். அதனால்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸை நிறுத்தி இருக்கிறது என்றார்.

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் அத்துமீறல்கள், அநியாயங்களை அத்தனையும் தாண்டி அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றார்.