முதல்வருக்கு ஒற்றைக்காது; இரட்டை நாக்கு! பாஜக கடும் தாக்கு

 
ச்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்றி அனுப்பி நான்கு மாதங்கள் ஆன பின்னர் இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று திருப்பி அனுப்பி இருக்கிறார் ஆளுநர் ஆர். என். ரவி.   தமிழ்நாடு சட்டமன்றம் சட்டம் இயற்றியதற்கும் ஆளுநர் அதனை ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பியதற்கும் இடையில் ஆன்லைன் சூதாட்டத்தால் 44 பேர்  தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகுமோ என்று கேள்விக்குறியாக இருக்கிறது.

ன்

  இது மட்டுமல்லாது தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி இருக்கும் 20க்கும் மேற்பட்ட சட்டமுன் வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது தமிழக மக்களை அவமதிக்கின்ற செயல் என்றும்,  அதனால் ஆளுநரின் இந்த எதேச்சதிகார செயலை கண்டித்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட கிடப்பில் இருக்கும் அனைத்து சட்ட முன் வடிவுகளுக்கும் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

இந்த நிலையில், உங்களில் ஒருவன் பதில்கள் பகுதியில்,  ஆளுநர்கள் அரசியலில் தலையிடக்கூடாது என்று அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.  ஒன்றிய பாஜக அரசின் ஆளுநர்கள் இதற்கு செவி மடுப்பார்கள் என நினைக்கிறீர்களா?  என்ற கேள்விக்கு,   ’’இதுவரையிலான செயல்பாடுகளை பார்த்தால் ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது’’ என முதல்வர் ஸ்டாலின் பதிலளித்திருந்தார்.

ஆளுநர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு, காதுகள் இ‌ல்லை என்றே தோன்றுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னதற்கு,  ’’அப்படி சொல்பவர்க‌ள் ஒற்றைக் காதும், இரட்டை நாக்கும் கொண்டவர்களாக இருப்பதாவே  தோன்றுகிறது’’என்கிறார் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.