அன்று பகத்சிங் செய்ததற்கு ஒரு எப்ஐஆர் கூட போடல; ஆனா, இன்று மோடி.. அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்

 
ke

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.   மோடியை அகற்றுங்கள்..  நாட்டைக் காப்பாற்றுங்கள் என்ற முழக்கங்கள் இந்தியில் எழுதப்பட்டுள்ளன.   பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது என்பதால் சட்ட விரோதமாக ஒட்டப்பட்டுள்ளது என்பதால் இது தொடர்புடையவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  மொத்தம் எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.  8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

d
  
 இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் குஜராத் ஆம் ஆத்மி கட்சி தலைவர்,   இந்த கைது நடவடிக்கை போலீசாருக்கு பாஜக மீது இருக்கும் பயத்தை காட்டுகிறது என்கிறார்.   இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும்,   பாஜகவின் சர்வாதிகாரத்தை பாருங்கள்.  குஜராத்தில் மோடியை அகற்றுங்கள் நாட்டை காப்பாற்றுங்கள் என்று போஸ்டர் ஒட்டியதற்காக ஆம் ஆத்மி கட்சியினர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.  

 மோடி மற்றும் பாஜக மீது உள்ள பயம் பயம் காரணம் தான்.  இல்லையென்றால் வேறு என்ன இருக்க முடியும்.  நீங்கள் விரும்பும் அளவுக்கு கஷ்டப்படுத்துங்கள்.  ஆனால் ஆம் ஆத்மி தொண்டர்கள் தொடர்ந்து போராடுவார்கள் என்று கூறி இருக்கிறார். 

bb

 பிரதமரை குறி வைத்து கடந்த வாரம் ஆயிரக்கணக்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன.  இது தொடர்பாக 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆறு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட அந்த ஆறு பேரில் இரண்டு பேர் அச்சகத்தின் உரிமையாளர்கள் அவர்கள் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்காகவும் , சட்டத்தின்படி அச்சிடப்பட்ட அச்சகத்தின் பெயரை சுவரொட்டிகளில் குறிப்பிட்டதற்காகவும் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று கூறியது டெல்லி போலீசார் நிலையில் இந்த கைது நடவடிக்கை .  

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ,  சுதந்திரத்திற்கு முன்பு கூட சுதந்திரப் போராட்ட வீரர்கள் போஸ்டர்களை ஒட்டினார்கள். அவர்கள் மீது கூட வழக்கு போடவில்லை.  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பகத்சிங் பல போஸ்டர்களை ஒட்டி இருக்கிறார்.  அவர் மீது ஒரு எஃப் ஐ ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.