'கள்ளக்'காதலை (லவ் ஜிகாத்).. அடங்க மறுப்பவர்களுக்கும், அத்து மீறுபவர்களுக்கும் புரியாதது வியப்பல்ல - பாஜக பதிலடி

 
mo

காதல், மதமாற்றம், புனித பசு, என்ற பெயரில் அவர்கள் செய்யும் வன்முறை தான் மோடியை இந்த அளவிற்கு வலிமையாக உருவாகியுள்ளது  என்று கூறியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தில் பிபிசி தயாரித்த  இந்தியா மோடி என்கிற ஆவணப்படத்தை தமிழில் பெரிய திரையில் திரையிட்டனர்.  

o

அந்நிகழ்வின் போது பேசிய திருமாவளவன்,   காதல் -மதமாற்றம்- புனித பசு என்கிற பெயரில் அவர்கள் செய்யும் வன்முறைகள் தான் மோடியை இந்த அளவிற்கு வலிமையாக உருவாக்கியிருக்கிறது என்றார்.  அவர் மேலும்,   மதச்சார்பின்மை என்கிற ஒற்றை வார்த்தைக்காக ஒருவர் முதன்முதலில் கொல்லப்பட்டார் என்றால் அது காந்தியடிகள் தான் என்றார்.

 திமுகவையும் திராவிடத்தையும் எதிர்ப்பது தமிழ் தேசியம் அல்ல அது திரிபு வாதம் . அப்படி செய்வது சனாதனத்திற்கு துணை போவதற்கு சமம் என்ற திருமா,   பெரியாரை எதிர்ப்பது தமிழ் தேசியம் அல்ல.  சனாதனத்தை எதிர்ப்பது தான் தமிழ் தேசியம் என்றார்.

 மோடி என்பவர் தனிப்பட்ட நபராக சக்தியாக வளர்ந்து நிற்கிறார் என்று எண்ண வேண்டாம்.   மக்கள் விரோத சனாதன கோட்பாடு அவருக்கு பின்னால் இருக்கிறது.  ஆகவே நாம் இதில் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்த திருமா,   வெறுப்பு உணர்வின் உச்சத்தில் இருக்கும் மோடியிசம் பிபிசி நிறுவனத்தால் அம்பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.  குஜராத்தில் வன்முறைக்கு பின்னால் சங்பரிவார் அமைப்புகளும் பாஜகவும் இருந்திருக்கிறது என்பது வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கிறது.   மீண்டும் ஒரு முறை மோடி பிரதமர் ஆனால் இந்த நாடு என்ன ஆகும் என்பது தான் நம் முன்னால் இருக்கின்ற கேள்வி.

a

 இதை சிலர் கண்டுகொள்ளாமல் திமுக எதிர்ப்பையும்,  திராவிடர் கழக எதிர்ப்பையும் எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.   நம் முன்னால் மிகப்பெரிய சவாலாக இருப்பது மோடி அரசியல் தான் என்று கவலை தெரிவித்து இருந்தார்.

இதற்கு தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,   'கள்ளக்'காதலை (லவ் ஜிகாத்), 'கட்டாய' மதமாற்றத்தை, புனித பசு வதையை எதிர்ப்பது வன்முறையல்ல, கலாச்சார சீர்கேட்டுக்கு எதிரான சீர்திருத்தம்.  சட்டத்திற்கு அடங்க மறுப்பவர்களுக்கும், அத்து மீறுபவர்களுக்கும் வன்முறைக்கான பொருள் புரியாதது வியப்பல்ல என்கிறார்.