இனிமேல் சினிமா தொடர்பாக யாரும் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் -அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
இனிமேல் சினிமா தொடர்பாக யாரும் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
திமுகவில் இளைஞர் அணி செயலாளராக இருந்த உதயநிதி சில படங்களில் நாயகனாக நடித்து வந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வர் ஆனார். அந்த தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு உதயநிதி எம். எல். ஏ ஆனார். அதன் பின்னர் திமுக அரசியலில் தீவிரமாக களநிற களமிறங்கிய உதயநிதி திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
தற்போது தமிழக இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரான பின்னர் சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார். இதற்கு முன்பு நடித்துள்ள திரைப்படங்கள் தான் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் நான்கு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட கண்ணை நம்பாதே படம் தற்போது திரைக்கு வர இருக்கிறது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்கள் தயாரித்தும் திரைப்பட விநியோகத்திலும் ஈடுபாடு காட்டி வந்தார். அவர் அமைச்சரான பின்னர் அந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் திரையுலக நண்பர்கள் பட விநியோகம் ,வியாபாரம் சம்பந்தமாக உதயநிதியை அடிக்கடி தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்கள்.
இதனால் அவர், இனிமேல் சினிமா தொடர்பாக என்னை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் . ரெட் ஜெயன்டில் இருந்து வெளியே வந்து விட்டேன். அதை இனிமேல் அர்ஜுன் துரை, செண்பகமூர்த்தி ஆகியோர்தான் பார்த்துக் கொள்கிறார்கள் என்று அறிவித்திருக்கிறார். கண்ணை நம்பாதே படம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார். மேலும், இளைஞர இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் இப்போது அமைச்சராகவே ஆகிவிட்டேன். ஆனால் நான் ஒரே ஒரு ஒரே பாடலில் பெரிதாகி விட்டேன் என்று நினைத்துக் கொள்வார்கள். நான்கரை ஆண்டுகள் உழைத்து தான் அமைச்சராக இருக்கிறேன் என்பதை அவர் குறிப்பிட்டு சொன்னார்.