தனித்துப் போட்டி - காங்கிரஸ் தடாலடி அறிவிப்பு

 
காங்கிரஸ் காங்கிரஸ்

மேற்கு வங்க அரசியலில் புதிய அரசியல் திருப்பமாக காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

No Alliance, Congress To Go Solo In All 294 Seats Of Bengalதமிழக சட்டமன்ற தேர்தலோடு மேற்கு வாங்க மாநிலத்திற்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி கூட்டணியுடன் இல்லாமல், காங்கிரஸ் கட்சி தனியாகப் போட்டியிட முடிவு செய்துள்ளது. இடதுசாரிகளுடன் கடந்த தேர்தல்களில் கூட்டணி அமைத்தும் எதிர்பார்த்த அளவில் வாக்கு மற்றும் இடங்களைப் பெற முடியவில்லை என்பதால், இம்முறை தனிப்போட்டியே சரியான வழி என காங்கிரஸ் தலைமை கருதியுள்ளது. 

மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையிலான இருமுனைப் போட்டியில், தனித்த அடையாளத்துடன் காங்கிரஸ் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதும் இந்த முடிவின் பின்னணி காரணமாகக் கூறப்படுகிறது. கூட்டணி இல்லாமல் போட்டியிடுவது ஆபத்தான முடிவாக இருந்தாலும், நீண்டகாலத்தில் கட்சியின் அரசியல் செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியாக இதை காங்கிரஸ் பார்க்கிறது. காங்கிரஸின் முடிவு மேற்கு வங்க அரசியலில் புதிய அரசியல் சமன்பாட்டை உருவாக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

Advertisement