உ.பி.யில் பா.ஜ.க. அரசை தேர்ந்தெடுங்க.. அமெரிக்காவை போன்று இங்கு சாலைகள் அமைக்கப்படும்.. நிதின் கட்கரி

 
அமெரிக்க சாலைகள்

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. அரசை தேர்ந்தெடுங்க, உத்தர பிரதேசத்தின் சாலை கட்டமைப்பு அமெரிக்காவை  போல் இருக்கும் என்று அம்மாநில மக்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வாக்குறுதி அளித்தார்.

உத்தர பிரதேசம் மிர்சாபூரில் மொத்தம் 146 கி.மீட்டர் நீளம் கொண்ட ரூ.3,037 கோடி மதிப்பிலான நான் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில் கூறியதாவது:  யோகியை ஆதரியுங்கள். எங்கள் அரசை தேர்ந்தெடுங்கள், மாநிலத்தில் மேலும் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டை கொண்டு வருவேன். 

யோகி ஆதித்யநாத் அரசு குற்ற விவரங்களை மறைக்க முயற்சி செய்கிறது…. பிரியங்கா காந்தி தாக்கு….

இது போன்ற பணிகள் நடக்கும்போது, உத்தர பிரதேசத்தின் சாலை கட்டமைப்பு அமெரிக்காவை  போல் இருக்கும். எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன். வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார செழுமைக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டு அவசியம். உத்தர பிரதேசத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். 

வாங்குன காரை நிறுத்த பார்க்கிங் இல்லாததே வாகன விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் – நிதின் கட்கரி 

இந்த சாலை திட்டங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும், பிராந்தியத்தில் சிறந்த இணைப்பை வழங்கும். மாநிலத்தின் வளாச்சி வேகத்தை இரட்டிப்பாக்கும்.  இந்த சாலை திட்டங்கள் பிராந்தியத்தில் சிறந்த இணைப்புடன் சரக்குகளின் போக்குவரத்தை எளிதாக்கும்.  விவசாய விளைபொருட்கள், உள்ளூர் மற்றும் பிற பொருட்களுக்கான சந்தைகளை அணுகுவதற்கு இது உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.