புதுக்கூட்டணி! 20 தொகுதி! அன்புமணி, திருமா, வேல்முருகன் ரகசிய பேச்சு!

 
pv

 பாமக, விடுதலை சிறுத்தைகள் , தமிழர் வாழ்வுரிமைக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து புதுக்கூட்டணி அமைத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வட மாவட்டங்களில் உள்ள 20 தொகுதிகளிலும் கணிசமான தொகுதிகளை பெற்று விடலாம் என்று கணக்கு போட்டு இருப்பதாகவும்,  இது குறித்து ரகசிய பேச்சுக்கள் நடந்து வருவதாகவும் தகவல் பரவுகின்றன.

tvh

 ஒரே கூட்டணியில் பாமக, விடுதலை சிறுத்தைகள் இரண்டும் இருக்க வாய்ப்பு இல்லை என்கிற ரீதியில் இந்த இரண்டு கட்சிகளும் எதிர் எதிர் துருவங்களாக நிற்கின்றன.   இந்த நிலை எல்லாம் மாறிவிட்டது.  திமுக கூட்டணியில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சி உள்ளது . இதில் பாமக இடம்பெற அவ்வப்போது பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளிவருகின்றன.  வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமக ,திமுகவுடன் இணைய விருப்பதாக தகவல் பரவி வரும் நிலையில்,  திமுக கூட்டணியில் பாமக வந்தால் விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுக கூட்டணிக்கு சென்று விடும் என்றும் பேசப்பட்டு வருகிறது.  சில நேரங்களில் திருமாவளவன், கூட்டணியை ஆதரித்து பேசினாலும் பல நேரங்களில் கூட்டணி செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி எதிர்த்து வருவதால் அவர் அணி மாறும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

 கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமகவுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டன.  சிதம்பரத்தில் திருமாவளவன், விழுப்புரத்தில் விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் நின்று வெற்றி பெற்றனர்.  வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் விசிக மூன்று சீட்  எதிர்பார்க்கிறது.  ஆனால் திமுகவோ ஒரு சீட் மட்டும் ஒதுக்க முடிவு எடுத்திருக்கிறது என்றும்,  இதனால் விசிக அதிருப்தியில் இருக்கிறது என்றும் தகவல்.  

 இந்த நிலையில்தான் வடமாவட்டங்களில்  20 நாடாளுமன்றத்தொகுதிகள் உள்ளன.  இந்த 20 தொகுதிகளிலும் பாமக- விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கட்சி ஆகிய மூன்று கட்சிக்கும் கணிசமான வாக்கு, செல்வாக்கு உள்ளன.  அதனால் திமுக கூட்டணியில் இணைந்து சொற்ப தொகுதிகளை பெறுவதை விட புது கூட்டணி அமைத்து மூன்று பேரும் போட்டியிட்டு 20 தொகுதிகளில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்று குறிப்பாக பாமக ,விசிக தலைவர்கள் நினைக்கின்ற நினைப்பதாகவும் , அதேபோல பாமக உடன் கூட்டணி அமைத்து செயல்படலாம் என்று தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனும் விரும்புவதாகவும் தகவல்.  இது தொடர்பாக  பாமக -விசிக பிரமுகர்கள் ரகசிய பேச்சு நடத்தி வருவதாகவும் தகவல் பரவுகிறது.