“தவெகவில் சாதி பார்த்து பதவி வழங்குறாங்க; பட்டியலினத்தவர்களை உள்ளே விடமாட்றாங்க”- குமுறும் தொண்டர்கள்

 
s

தமிழக வெற்றிக் கழகத்தில் சாதி பார்த்து தான் பதவி வழங்கப்படுகிறது என திருவண்ணாமலை நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம் தொகுதி அடங்கிய திருவண்ணாமலை மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுவோர், மாவட்ட கழக பொறுப்புகளுக்கு ஜாதி பார்த்து பதவி வழங்குவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். தாங்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இத்தனை ஆண்டுகளாக மக்கள் இயக்கத்திற்கு உழைத்தும் தங்களுக்கு பதவி வழங்கவில்லை எனவும், பட்டியலினத்தை ஒதுக்கிவிட்டு BC , MBC வகுப்பினருக்கும், அவர்களது மனைவி, சகோதரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் பதவி வழங்கிவதாக வேதனையுடன் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. திருவண்ணாமலை மேற்கு மாவட்டத்திற்கு கதிர் என்பவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், செயற்குழு உறுப்பினர், இணை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்திற்கு இத்தனை ஆண்டுகளாக உழைத்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாரையும் நியமிக்காமல் தனது உறவினர்களையே நியமித்துக் கொண்டதாக குற்றச்சாட்டுஎழுந்துள்ளது.


இது தொடர்பாக தலைமை வரை பேசிவிட்டதாகவும், ஆனால் எந்த தீர்வும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும், ஒரு கட்டத்தை மீறினால் தலைமையை சந்திக்கவே விடுவதில்லை எனவும் அப்பு‌  என்பவர் குற்றஞ்சாட்டுகிறார். கீழ்பெண்ணத்தூரில் 60 கிளைகள் திறந்துள்ளோம், கட்சிக்காக 5000 பேரை உறுப்பினராக இணைத்துள்ளோ, ஆனால் ஒன்றிய, நகர என எந்த பொறுப்பும் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனக்கூறும் அவர், இருந்தாலும் கட்சியில் தான் நீடிப்போம் என்றார். 20 தடவை நாங்கள் விஜயை சந்திக்க காத்திருந்தோம். ஆனால் விஜய்யை சந்திக்க முடியவில்லை எனக் கூறிய அப்பு, கடைசியாக மீடியாவை சந்திக்கிறோம் எங்களுக்கு நீதி வேண்டும் என்றார்.