சட்டம்தான் உயர்ந்தது.. மத்திய அரசின் இசட் ப்ளஸ் பாதுகாப்பு கங்கனா ரணாவத்தை காப்பாற்றாது.. நவாப் மாலிக்

 
இசட் ப்ளஸ் பாதுகாப்பில் கங்கனா ரணாவத்

சட்டத்தை விட உயர்ந்தவர் யாருமில்லை, மத்திய அரசின் இசட் ப்ளஸ் பாதுகாப்பு கங்கனா ரணாவத்தை காப்பாற்றாது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் தெரிவித்தார்.


பாலிவுட் நடிகையும், பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான கங்கனா ரணாவத் இன்ஸ்டாகிராமில், காலிஸ்தானி பயங்கரவாதிகள் இன்று அரசாங்கத்தை முறுக்கிறார்கள். காலிஸ்தானி பயங்கரவாதிகளால் 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் ஒரு பெண்ணை மறந்து விடக்கூடாது. காலிஸ்தானிகளை தனது காலணிகளுக்கு கீழ் நசுக்கிய ஒரே பெண் பிரதமர். அவள் இந்த தேசத்துக்கு எவ்வளவு துன்பம் கொடுத்தாலும், தன்  உயிரை விலையாக கொடுத்து கொசுக்களைப் போல் நசுக்கினாள். இன்றும் அவள் பெயரை கேட்டு சிலிர்க்கிறார்கள். அவர்களுக்கு அத்தகைய குரு தேவை என்று பதிவு செய்து இருந்தார்.

கங்கனா அலுவலகம் இடிப்பு.. முதலில் எதிர்ப்பு, பின்பு ஆதரவு… பல்டி அடித்த சரத் பவார்

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், சீக்கிய அமைப்பு ஒன்று கங்கனாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது. இந்நிலையில், மத்திய அரசின் இசட் ப்ளஸ் பாதுகாப்பு கங்கனா ரணாவத்தை இனி காப்பாற்றாது என்று நவாப் மாலிக் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

பா.ஜ.க. மேற்கு வங்கத்தில் செய்ததை மகாராஷ்டிராவில் ரானே மூலம் செய்ய முயற்சி செய்கிறது.. நவாப் மாலிக் குற்றச்சாட்டு
கங்கனா ரணாவத்துக்கு எதிராக சீக்கிய சமூகம் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. ஏனெனில் அவர் பெரிய தலைவர்களை அவமதிக்கும் பழக்கம் கொண்டவர். யாரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.  மத்திய அரசிடம் இருந்து அவருக்கு வழங்கப்படும் இசட் ப்ளஸ் பாதுகாப்பு அவருக்கு இனி உதவ முடியாது. குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி.) சட்டம் உள்பட விவசாயிகளின் பல கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.