2024ல் சரத் பவார் தலைமையில் மத்தியில் ஆட்சி.. மம்தாவின் கனவை கலைக்கும் தேசியவாத காங்கிரஸ்

 
மம்தா

2024ல் சரத் பவார் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான நவாப் மாலிக் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 80வது பிறந்த நாளை கொண்டாடினார். சரத் பவாரின் பிறந்தநாளை முன்னிட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தனர். அந்த கொண்டாட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் கலந்து கொண்டார்.

சரத் பவார்

பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நவாப் மாலிக் பேசுகையில் கூறியதாவது: கடந்த ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடிக்கு மாற்று உண்டா? பா.ஜ.க.வுக்கு மாற்று யார்? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. மகாராஷ்டிராவில் சரத் பவார் தலைமையில் சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்  ஆகிய கட்சிகள் ஆட்சி அமைக்க முடிந்தால், 2024ல் சரத் பவார் தலைமையில் நாட்டில் ஆட்சி அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க. மேற்கு வங்கத்தில் செய்ததை மகாராஷ்டிராவில் ரானே மூலம் செய்ய முயற்சி செய்கிறது.. நவாப் மாலிக் குற்றச்சாட்டு

நவாப் மாலிக்கின் இந்த பேச்சு மம்தா பானர்ஜியின் பிரதமர் கனவு கலைக்கும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத கட்சிகளை ஒன்றிணைத்து தனது தலைமையில் மெகா எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க மற்றும் பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.