கோயில் நிலங்களை ஆட்டைய போட்டு கோடிக்கணக்கில் சுருட்டிய பா.ஜ.க. தலைவர்கள்.. நவாப் மாலிக் குற்றச்சாட்டு

 
பா.ஜ.க. பா.ஜ.க.

மகாராஷ்டிராவில் பா.ஜ.க. தலைவர்கள் கோயில் நிலங்களை  அபகரித்து, பினாமி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை சுருட்டியுள்ளனர் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் குற்றம் சாட்டினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் கூறியதாவது:  பீட் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.கவின் மேலவை உறுப்பினர் சுரேஷ் தாஸ் மற்றும் அஷ்த தொகுதியின்  முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க.வின் பிரபல தலைவர்களில் ஒருவருமான பீம்ராவ் தோண்டே ஆகியோர் கோயில் நிலைத்தை அபகரித்து, பினாமி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை சுருட்டியுள்ளனர். 

பா.ஜ.க. மேற்கு வங்கத்தில் செய்ததை மகாராஷ்டிராவில் ரானே மூலம் செய்ய முயற்சி செய்கிறது.. நவாப் மாலிக் குற்றச்சாட்டு

கோயில் நிலங்கள் சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்யப்பட்டதற்கு எதிராக அமலாக்க இயக்குனரகத்தில் ராம் காடே புகார் அளித்துள்ளார்.  பீட் மாவட்டத்தில் கோயில்களுக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலம், மசூதிகளுக்கு சொந்தமான 213 ஏக்கர் நிலம் உள்பட மொத்தம் 513 ஏக்கர் நிலம் பா.ஜ.க. தலைவர்களால் தனியாருக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளது.

பீம்ராவ் தோண்டே

இந்த நிலங்கள் 3 முஸ்லீம் மற்றும் 7 இந்து கோயில்களுக்கும் சொந்தமானது. 2017 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் நடந்த இந்த முறைகேடான பணப் பரிவர்த்தனை மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க. தலைவர்கள் முன்னாள் துணை ஆட்சியர் உதவியுடன் வழிபாட்டுத் தலங்களின் நிலத்தை தனியாருக்கு மக்களுக்கு மாற்றப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் சுருட்டப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.