பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது.. மணிப்பூரில் தேசிய மக்கள் கட்சி தனித்து போட்டி.. கான்ராட் சங்மா

 
கான்ராட் சங்மா

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்று அந்த கட்சியின் தலைவா கான்ராட் சங்மா தெரிவித்தார்.

மணிப்பூரில் 60 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் தற்போது பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க. கூட்டணியில் முக்கிய கூட்டாளியாக தேசிய மக்கள் கட்சி உள்ளது. தேசிய மக்கள் கட்சி எதிர்வரும் தேர்தலில் 45 தொகுதிகள் வரை தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது.

பா.ஜ.க.

மேகாலயா முதல்வரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேசிய மக்கள் கட்சியின் (என்.பி.பி.) தேர்தல் குழு இறுதி பட்டியலை அளிக்கும். அதற்காக காத்திருக்கிறேன். ஆனால்  அது (தனித்து போட்டி) கண்டிப்பாக 30க்கும் மேற்பட்ட இடங்களாக இருக்கும். மேலும் அது 45 இடங்கள் வரை தொடலாம்.

தேசிய மக்கள் கட்சி

ஆனால் கட்சியின் தேர்தல் குழு தனது அறிக்கையை மத்திய குழுவிடம் சமர்ப்பித்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 2017 மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மக்கள்  கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க தேசிய மக்கள் கட்சி ஆதரவு அளித்தது. துணை முதல்வர் உள்பட 2 அமைச்சர்கள் பதவியை தேசிய மக்கள் கட்சி பெற்றது.