ரகசியங்களை கசியவிட்ட நாசர்! பதவி பறிப்பின் பரபரப்பு பின்னணி

 
n

பால்வளத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு பதிலாக மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அமைச்சராக்கப்பட்டு இருக்கிறார்.   நாசர் வகித்து வந்த பால்வளத்துறை பொறுப்பு அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு மாற்றப்பட்டு இருக்கிறது.   நாசருக்கு ஒதுக்கப்பட்டு இருந்த அறை ராஜாவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

na

திமுக ஆட்சிக்கு வந்து  மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் தொடக்க கொண்டாட்டத்தில் இருக்கும் நேரத்தில் நடந்த இந்த பதவி பறிப்பு,  கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .  நாசரின் இந்த பதவி பறிப்புக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் பண்ணை வீட்டு ரகசியங்களை கசியவிட்டதுதான் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

 நாசர் அமைச்சர் ஆவதற்கு முன்பு கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வந்தார்.  கட்சி நிர்வாகிகளிடையே நெருக்கம் காட்டி வந்தார்.  அதுவே அமைச்சரான பின்னர் கட்சி நிர்வாகிகளை அவர் கண்டு  கொள்வதே இல்லை . வெற்றி பெற்றதற்காக மக்களை சந்தித்து நன்றி சொல்லவும் இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது .  ஆவின் பால் விவாகரத்திலும் கொள்முதல் மற்றும் விலை ஏற்றம், பால் தட்டுப்பாடு விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சை எழுந்து வந்தது.   இதனால் தனது துறையை சிறப்பாக நிர்வகிக்க தெரியாத நாசர் மாற்றப்படுவார் என்று தகவல் வந்து கொண்டிருந்தன.

na

 இந்த நிலையில் திருவள்ளூரில் நடந்த முதல்வர் விழாவில் நாற்காலி எடுத்து வர தாமதமானதால் சொந்த கட்சியினர் மீது கல்லை விட்டு எறிந்த விவகாரம் ’தொட்டில் பழக்கம்’ என்று  எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சிக்கும் அளவிற்கு விவகாரம் பெரிதானது.   இப்படி தொடர்ந்து நாசர் தொடர்ந்து  தலைமைக்கு அதிருப்தி கொடுத்துக் கொண்டே வந்தவர்,  பண்ணை வீட்டு ரகசியங்களையும் கசிய விட்டதால் தான் வசமாக சிக்கி பதவியை  பறிகொடுத்திருக்கிறா என்கிறார்கள்.

 கோபாலபுரம் இல்லத்திற்கு சர்வ சாதாரணமாக சென்று வரும் அளவிற்கு நெருக்கமாக இருந்திருக்கிறார் நாசர்.  அதனால் தான் திமுக ஆட்சிக்கு வந்ததும் நாசருக்கு நிச்சயம் பதவி என்று  கட்சி நிர்வாகிகளும் நம்பிக்கையுடன் பேசி இருக்கிறார்கள்.  அந்த அளவுக்கு முதல்வருக்கு நெருக்கமாக இருந்த நாசரின்  பதவி ஏன் பறிக்கப்பட்டது  என்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கிய காரணமாக ஒன்றை கூறுகிறார்கள் திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகிகள்.

an

 அமைச்சராக இருந்த நாசர் திருவள்ளூர் மாவட்டத்தின் திமுக செயலாளராகவும் உள்ளார்.    இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் கட்சியின் ‘முக்கிய ’குடும்பத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டை கவனிக்கும் பொறுப்பும் நாசரிடம் இருந்து இருக்கிறது.  அந்த பண்ணையை வீட்டில் வந்து தங்குபவர்கள் பற்றியும் அங்கு நடக்க விஷயங்கள் குறித்தும் யாருக்கும் எதுவும் சொல்லக்கூடாது என்று கட்சி தலைமை பலமுறை எச்சரித்திருக்கிறது . ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அந்த பெண்ணை வீட்டிற்கு யார் யார் வருகிறார்கள்? என்னென்ன நடக்கிறது என்பதை எல்லாம் கட்சியினரிடம் பகிர்ந்து வருவதை பழக்கமாக வைத்திருந்திருக்கிறார் நாசர். 

இது மேல் இடத்திற்கு கடும் எரிச்சலை கொடுத்திருக்கிறது . இதனால் நாசரின் மீது  தலைமை  அதிருப்தியில் இருந்த நிலையில் நாசரின் கார் டிரைவர் இளம் பெண் ஒருவரை பலாத்காரம் செய்து விட்டார்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறையின் வாயிலாக நாசர் நெருக்கடி கொடுக்கிறார். இதை மேலிடத்திற்கு சொல்லாமல் நாசர் மறைக்கிறார் என்று   உளவுத்துறை அறிக்கை கொடுக்க, கடுப்பில் இருந்த தலைமை  நாசரின் அமைச்சர் பொறுப்பை பறிக்க சரியான நேரம் என்று முடிவெடுத்து அதைச் செய்து விட்டது என்கிறார்கள்.